‘சிவன்’ வேடமணிந்து நாடகம் போட்ட நடிகர் கைது

நகா­வன்: அசா­மில் சிவன் போல் வேட­ம­ணிந்து பண­வீக்­கம் உள்­ளிட்ட விவ­கா­ரத்­திற்கு எதி­ராக தெரு­வில் நாட­கம் ­போட்ட நபரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அசா­மின் நகா­வன் மாவட்­டத்­தில் சிவன் மற்­றும் பார்­வதி போன்று வேட­ம­ணிந்து பண­வீக்­கம் உள்­ளிட்ட விவ­கா­ரங்­களைப் பற்றி பேசி தெருக்­களில் இரு­வர் நாட­கம் போட்­ட­னர். இத­னால் புதிய சர்ச்சை கிளம்­பி­யது.

இந்த நிலை­யில் சனிக்­கி­ழமை மாலை அவர்­கள் இரு­வ­ரும் பைக் ஒன்­றில் பய­ணித்­த­படி நகா­வ­னின் காலேஜ் சவுக் பகு­திக்கு சென்று இறங்­கி­னர்.

அப்­போது வாக­னத்­தில் எரி­பொ­ருள் தீர்ந்துவிட்­ட­தா­கக் கூறி அந்த பகு­தி­யில் நாட­கம் போட்­டுள்­ள­னர்.

அதில், எரி­பொ­ருள், உணவுப் பொருள்கள் மற்­றும் பிற அத்­தி­யா­வ­சியப் பொருள்­க­ளின் விலை உயர்வை எதிர்த்து அவர்­கள் நாட­கம் போட்­ட­னர்.

அதன் பின்­னர், சிவன் வேடம்­அணிந்த நபர், பிர­த­மர் மோடியை தாக்கி பேசும் வகை­யில் முத­லா­ளி­ க­ளின் விருப்­பத்­திற்­காக மட்­டுமே அரசு செயல்­ப­டு­கிறது என்று கூறி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பொதுமக்­க­ளின் விவ­கா­ரங்­களைக் கவ­னத்­தில் கொள்­வதே இல்லை என்­றும் அவர் கூறி­ய­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் பார்­வை­யா­ளர்­க­ளி­டம் அதி­க­ரித்து வரும் பண­வீக்­கத்­திற்கு எதி­ராக நீங்­களும் தெருக்­களில் இறங்கி போராட்­டத்­தில் ஈடு­ப­டுங்­கள் என அவர் கூறி­யுள்­ளார். இரு­வ­ரும், படா பஜார் பகு­திக்­கும் சென்று இதே­போன்ற நாட­கம் ஒன்றை நடத்தி உள்­ள­னர்.

இது நகா­வன் மாவட்­டத்­தின் பஜ்­ரங் தள அமைப்­பி­னர் மற்­றும் விஷ்வ இந்து பரி­ஷத் அமைப்­பி­னர் கவ­னத்­திற்கு சென்­றுள்­ளது. அவர்­கள் இரு­வ­ரும் இந்து சனா­தன தர்­மத்­தின் உணர்­வு­களைப் புண்­ படுத்தி விட்­ட­னர் என்று குற்­றச்­சாட்­டு­களை தெரி­வித்­த­து­டன் நடந்த சம்­ப­வத்­திற்கு கண்­ட­ன­மும் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து நகா­வன் சதர் காவல் நிலை­யத்­தில் நடி­கர்­க­ளான பிரிஞ்சி போரா(சிவ­னாக வேட­மிட்­ட­வர்) மற்­றும் கரீஷ்மா (பார்­வ­தி­யாக வேட­மிட்­ட­வர்) ஆகிய இரு­வர் மீது புகார் அளிக்­கப்­பட்­டது. இதை வைத்து காவல்­து­றை­யி­னர் போராவைக் கைது செய்து உள்­ள­னர். பின்னர் அவர் விடுவிக்கப் பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!