காங்கிரஸ்: எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது பாஜக

கோவாவில் ஆட்சியமைத்த பிறகும் ரூ.40 கோடி வரை பேரம் பேசுவதாகப் புகார்

பானாஜி: கோவா­வில் ஆட்சி அமைத்த பிற­கும், எதிர்க்­கட்சி எம்­எல்­ஏக்­களை விலைக்கு வாங்க பார­திய ஜனதா முயற்சி செய்­வ­தாக காங்­கி­ரஸ் கட்சி குற்­றம்­சாட்டி உள்­ளது. இத்­த­கைய போக்கு ஜன­நாய­கத்­துக்கு ஆபத்­தா­னது என அக்­கட்சி சாடி­யுள்­ளது.

மேலும், காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­க­ளுக்கு 30 முதல் 40 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்­ப­டு­வதாக கோவா மாநில முன்­னாள் காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சடோன்கர் குற்றம்­சாட்டி உள்­ளார்.

கோவா சட்­டப்­பே­ர­வை­யில் 40 இடங்­கள் உள்­ளன. இந்த ஆண்டுத் தொடக்­கத்­தில் நடை­பெற்ற சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் 25 இடங்­களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தது. 11 இடங்­களில் வெற்­றி­பெற்ற காங்­கி­ரஸ் முக்­கிய எதிர்க்­கட்­சி­யா­னது.

எனி­னும் எதிர்க்­கட்­சித் தலை­வரை தேர்வு செய்­வது தொடர்­பில் அக்­கட்­சி­யில் குழப்­பம் வெடித்­தது. தேர்­த­லுக்கு முன்பு காங்­கி­ரஸ் சார்­பில் முதல்­வர் வேட்­பா­ள­ராக அக்­கட்­சி­யின் மூத்த தலைவர்களில் ஒரு­வ­ரான திகம்­பர் காமத் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தார். எனவே, அவர்­தான் எதிர்க்­கட்­சித் தலை­வராக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் அதற்கு வாய்ப்பு இன்றி, பாஜ­க­வில் இருந்து விலகி காங்­கி­ர­சில் புதி­தாக இணைந்த மைக்­கேல் லோபோவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக அறி­வித்­தது காங்­கி­ரஸ் தலைமை.

இத­னால் திகம்­பர் காமத் கடும் கோபத்­தில் இருப்­ப­தா­கக் கூறப்­பட்ட நிலை­யில், அவ­ரது தலை­மை­யில் ஏழு காங்­கி­ரஸ் எம்எல்­ஏக்­கள் திடீ­ரென பாஜ­க­வில் இணை­யப்­போ­வ­தாக வெளி­யான தக­வல், காங்­கி­ரஸ் கட்­சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்­துள்­ளது.

மேலும், மைக்­கேல் லோபோவும் மீண்­டும் பாஜ­க­வில் இணைய ரக­சிய பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கோவா சட்­டப்­பே­ர­வை­யில் மிக விரை­வில் நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட உள்ள நிலை­யில், மைக்­கேல் லோபோவை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து காங்­கி­ரஸ் தலைமை நீக்கி ­உள்­ளது. மேலும், காங்­கி­ரஸ் கட்சி எம்­எல்­ஏக்­களை இழுப்­ப­தற்­காக பாஜக தரப்பு தலா ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை பேரம் பேசு­வதாக கோவா காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் கிரிஷ்­சோ­டங்­கர் குற்­றம்சாட்­டி­யுள்­ளார்.

தொழி­ல­தி­பர்­கள், நிலக்கரி மாஃபியா குழுக்­க­ளின் ஆத­ர­வோடு இந்­தப் பேரம் நடை­பெ­று­வ­தாக அவர் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது பகி­ரங்­க­மா­கச் சாடி­னார். ஆனால் பாஜக தலைமை இதை திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளது. காங்­கி­ர­சில் நில­வும் உட்­கட்­சிப் பூசல்­க­ளுக்கு பாஜக மீது பழி­போ­டப்­ப­டு­வ­தாக கோவா மாநில காங்­கி­ரஸ் கூறி­உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!