விஜய் மல்லையாவுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை

புது­டெல்லி: வங்கி மோசடி வழக்­கில் சிக்­கி­யுள்ள முன்­னாள் தொழி­ல­தி­பர் விஜய் மல்­லை­யா­வுக்கு இந்­திய உச்ச நீதி­மன்­றம் நான்கு மாத சிறைத்­தண்­டனை விதித்­தது.

நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்­பான வழக்­கில் அவ­ருக்கு இத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது அவர் லண்­ட­னில் உள்­ளார்.

தம் மீதான வழக்­கு­களை எதிர்­கொள்­ளா­மல் லண்­ட­னுக்குத் தப்­பிச் சென்­றுள்ள அவர் தம்மை நாடு கடத்­தக்­கூ­டாது என அங்­குள்ள நீதி­மன்­றத்­தில் மனு செய்­துள்­ளார்.

இந்­திய பொதுத்­துறை வங்கி­களில் சுமார் ரூ.9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து வெளி­நாட்டிற்குத் தப்­பி­யோடி, லண்­ட­னில் தஞ்­சம் புகுந்­துள்ள அவர் மீது கடந்த ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி வழக்கு தொடுத்­தது.

இதை­ய­டுத்து வாங்­கிய கடனை திருப்­பிச் செலுத்­தா­மல் எந்­த­வித பண பரி­வர்த்­த­னை­களும் மேற்­கொள்­ளக்­கூ­டாது என இந்­திய உச்ச நீதி­மன்­றம் 2017ஆம் ஆண்டு விஜய் மல்­லை­யா­வுக்கு உத்­த­ர­விட்­டது.

எனி­னும் இதைப் பொருட்­ப­டுத்­தா­மல் அவர் தமது பிள்­ளை­க­ளுக்கு ரூ.317 கோடி (40 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­கள்) பண பரி­வர்த்தனை செய்­த­தாக பாரத ஸ்டேட் வங்கி உச்­ச ­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­தது.

இதை­ய­டுத்து அவர் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி­ய­தை­ய­டுத்து அவரைக் குற்­ற­வாளி என்று அறி­வித்த உச்ச நீதி­மன்­றம், விஜய் மல்லையா­வுக்கு நான்­கு­மாத சிறைத்­தண்டனை விதித்­தது.

இந்­திய நீதி­மன்­றங்­களில் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர் நீதி­மன்­றத்­தில் இருக்­கும்­போ­து­தான் தீர்ப்பு அளிக்­கப்­படும். எனி­னும் விஜய் மல்­லையா நேரில் முன்­னி­லை­யா­காத போதி­லும் தீர்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!