காஷ்மீர் இளையர்கள் 700 பேர் தீவிரவாத அமைப்புகளில் இணைந்ததாகத் தகவல்

புது­டெல்லி: ஜம்மு, காஷ்­மீ­ரைச் சேர்ந்த சுமார் எழு­நூற்­றுக்­கும் மேற்­பட்ட இளை­யர்­கள் தீவி­ர­வாத அமைப்­பு­களில் இணைந்­த­தா­க­வும் கடந்த நான்கு ஆண்­டு­களில் அவர்­கள் இவ்­வாறு முடி­வெ­டுத்­துள்­ள­தா­க­வும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக மத்­திய உள்­துறை அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில், காஷ்­மீ­ரில் தற்­போது 89 வெளி­நாட்­டுத் தீவி­ர­வா­தி­களும் 59 உள்­நாட்­டுத் தீவி­ர­வா­தி­களும் செயல்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், இந்த தீவி­ர­வா­தி­கள் பல­ரும் லஷ்­கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முக­மது, ஹிஸ்­புல் முஜா­கி­தீன் ஆகிய தீவி­ர­வாத அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நடப்­பாண்­டில் 34 வெளி­நாட்­டுத் தீவி­ர­வா­தி­கள், 125 உள்நாட்டு தீவி­ர­வா­தி­கள் பாது­காப்­புப் படை­யி­ன­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ள­தா­க­வும் 123 தீவி­ர­வா­தி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் உள்­துறை அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"ஜம்மு காஷ்­மீ­ரில் கடந்த 2018ஆம் ஆண்­டில் 187 பேர், 2019இல் 121 பேர் தீவி­ர­வாத இயக்­கங்­களில் இணைந்­துள்­ள­னர். இந்த எண்­ணிக்கை 2020இல் 181ஆகவும், 2021இல் 142ஆக­வும் உள்­ளது.

"ஆக மொத்­தத்­தில், கடந்த நான்கு ஆண்­டு­களில் மட்­டும், மொத்­தம் 700 இளை­யர்­கள் தீவி­ர­வாத அமைப்­பு­களில் இணைந்­துள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. நடப்­பாண்­டி­லும் இது­வரை 69 இளை­யர்­கள் தீவி­ர­வா­தப் பாதை­யைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ள­னர்," என்று உள­வுத்­துறை கூறு­கிறது.

காஷ்­மீ­ரில் கடந்­தாண்டு 172 தீவி­ர­வா­தி­களும் கடந்த 2018 முதல் 2020 வரை 584 தீவி­ர­வா­தி­களும் பிடி­பட்­டுள்­ள­தாக உள்­துறை அமைச்சு மேலும் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, நாட்­டின் பல்­வேறு எல்­லைப் பகு­தி­யில் பணி­யாற்றி வரும் ராணு­வத்­தி­ன­ருக்கு சீன மொழி­யில் பேச பயிற்சி அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

எல்­லை­யில் மோதல் வெடிக்­கும்­போ­தும் சீன ராணு­வத்­து­டன் திடீர் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்­கும் ராணுவ வீரர்­களில் சில­ருக்கு மாண்­ட­ரின் மொழி தெரிந்­தி­ருப்­பது நல்­லது என மத்­திய அரசு கரு­து­வ­தா­கத் தெரி­கிறது.

ராணு­வத்­தில் உள்ள இள­நிலை, முது­நிலை கமாண்­டர்­க­ளுக்கு சீன மொழி பயிற்­று­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அம்­மொ­ழி­யில் தேர்ச்சி பெற்ற அதி­கா­ரி­கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்து வரு­வ­தா­க­வும் இந்­திய ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

குஜராத் மத்திய பல்கலைக்கழகம், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் உட்பட மூன்று கல்வி அமைப்புகளுடன் ராணுவத்தினருக்கு மாண்டரின் மொழியைக் கற்றுத் தருவதற்கான ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் செய்து கொண்டுள்ளது.

இந்த பயிற்சி தற்போது தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!