மலேசியாவுக்கு போர் விமானங்களை விற்கும் இந்தியா

புது­டெல்லி: மலே­சி­யா­வுக்கு 18 'தேஜாஸ்' இலகு ரக போர் விமா­னங்­களை விற்க இந்­தியா முன்­வந்­துள்­ளது. இந்­திய பாது­காப்­புத் துறை நேற்று இந்­தத் தக­வலை வெளி­யிட்­டது.

கடந்த ஆண்டு அர­சாங்க சார்பு நிறு­வ­ன­மான இந்­துஸ்­தான் ஏரோ­நாட்­டிக்ஸ் நிறு­வ­னத்­துக்கு உள்­ளூ­ரில் தயா­ரிக்­கப்­பட்ட 83 தேஜாஸ் விமா­னங்­களை 2023ஆம் ஆண்­டின் தொடக்­கத்­தில் விநி­யோ­கிக்க ஆறு பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் மதிப்­புள்ள ஒப்­பந்­தக் குத்­த­கையை அரசு வழங்­கி­யது. பிர­த­மர் நரேந்திர மோடி தலை­மை­யி­லான அர­சாங்­கம், வெளி­நாட்டு தற்­காப்பு ஆயு­தங்­களை நம்­பி­யி­ருக்க விரும்­ப­வில்லை. மேலும் உள்­ளூர் ஜெட் விமா­னங்­களை ஏற்­று­மதி செய்­ய­வும் அது முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.

இந்த நிலை­யில் கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் மலே­சிய ஆகா­யப் படை­யின் கோரிக்­கைக்கு பதில் அளிக்­கும் வகை­யில் இரட்டை இருக்கை 18 ஜெட் விமா­னங்­களை விற்க இந்­துஸ்­தான் ஏரோ­நாட்­டிக்ஸ் முன்வந்­த­தாக நாடா­ளு­மன்­றத்­தில் பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

அர்­ஜென்­டினா, ஆஸ்­தி­ரே­லியா, எகிப்து, அமெ­ரிக்கா, இந்­தோ­னீ­சியா, பிலிப்­பீன்ஸ் உள்­ளிட்ட பிற நாடு­களும் இந்த ஜெட் விமா­னத்­தில் ஆர்­வம் காட்­டு­வ­தாக நாடாளு மன்­றத்­தில் எழுத்­து­பூர்­வ­மாக அளித்த பதி­லில் பாது­காப்பு இணை அமைச்­சர் அஜய் பட் தெரி­வித்­ தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!