ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் கைது

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி எனத் தகவல்

புது­டெல்லி: நாட்­டின் 75ஆவது சுதந்­திர தின விழா கொண்­டாட்­டங்­க­ளைச் சீர்­கு­லைக்க பயங்­க­ர­வாத அமைப்­பு­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக மத்­திய உளவு முக­மை­கள் எச்­ச­ரித்த நிலை­யில், டெல்­லி­யில் ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வாத இயக்­கத்­தைச் சேர்ந்த ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அவர் பல்­வேறு நாச வேலை­க­ளுக்­குத் திட்­ட­மிட்­டி­ருந்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் பயங்­க­ர­வா­தி­கள் ஊடு­ருவி இருப்­ப­தாக கிடைத்த தக­வலை அடுத்து, தேசிய புல­னாய்வு முகமை அதிகாரி­கள் நாடு முழு­வ­தும் அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இதன் மூலம் பெங்­க­ளூரு, கோவை, ஈரோடு பகு­தி­களில் தங்கி, செயல்­பட்டு வந்த பயங்­க­ர­வா­தி­கள் சிலர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் இருந்­த­படி பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளுக்கு நிதி திரட்­டிய மொஹ்­சின் அக­மது (படம்) என்ற பயங்­க­ர­வாதி சிக்கி உள்­ளார். அவர் ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­பின் உறுப்­பி­னர் என்­பது தெரிய வந்­துள்­ளது.

டெல்­லி­யில் உள்ள பாட்லா ஹவுஸ் பகு­தி­யில் வசித்து வந்த அவ­ரைப் பற்றி ரக­சி­யத் தக­வல் கிடைத்­த­தா­க­வும் அதன் பேரில் நடத்­தப்­பட்ட சோத­னை­யின்­போது அவர் சிக்­கி­ய­தா­க­வும் தேசிய புல­னாய்வு முகமை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

பீகார் மாநி­லத் தலை­ந­கர் பாட்­னா­வைச் சேர்ந்த மொஹ்­சின் அக­மது, ஐஎஸ் பயங்­க­ர­வாத இயக்­கத்­துக்கு ஆத­ர­வா­கப் பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­வர் என்­றும் அவர் கிரிப்­டோ­க­ரன்சி எனப்­படும் மின்­னி­லக்க பண வடி­வில் ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­புக்­காக பணம் திரட்­டி­னார் என்­றும் தேசிய புல­னாய்வு முகமை தெரி­வித்­துள்­ளது.

குறிப்­பாக, சிரியா உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு அவர் அதிக அள­வில் பணம் அனுப்­பி­யுள்­ளார். அவ­ரி­டம் அதி­கா­ரி­கள் தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!