அமெரிக்காவில் கணவர் தொடர் சித்திரவதை: வாழ்வை முடித்துக்கொண்ட இந்தியப் பெண்

லக்னோ: கண­வ­ரும் அவ­ரது குடும்­பத்­தா­ரும் செய்த கொடு­மை­க­ளைத் தாங்க முடி­யா­மல் இந்­திய பெண் ஒரு­வர் அமெ­ரிக்­கா­வில் தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்­ளார்.

அதற்கு முன்­ன­தாக, அவர் கண்­ணீர் மல்­கப் பேசும் காணொ­ளிப் பதிவு ஒன்றை அந்­தப் பெண் வெளி­யிட்­டுள்­ளார்.

அதில் அவர் குறிப்­பிட்­டுள்ள விஷ­யங்­கள் கேட்­ப­வர்­க­ளின் மனதை பதை­ப­தைக்க வைக்­கும் வகை­யில் உள்­ளன.

உத்­த­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மந்­தீப் கவுர் என்ற 30 வய­தான அந்­தப் பெண்­ணுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திரு­ம­ணம் நடை­பெற்­றது. இதை­ய­டுத்து கண­வ­ரு­டன் நியூ­யார்க் நக­ருக்­குப் பறந்­தார் மந்­தீப் கவுர்.

மண வாழ்க்­கைப் பற்­றிய கன­வு­க­ளு­டன் அமெ­ரிக்கா சென்­ற­டைந்த அவ­ருக்கு கண­வ­ரின் உண்­மை­யான முகம் தெரி­யத் தொடங்­கி­யது.

வர­தட்­ச­ணை­யாக 50 லட்­சம் ரூபாய் வாங்­கித்­த­ரு­மாறு நிர்­பந்­தித்து மந்­தீப் கவுரை சித்­திர­வதை செய்­யத் தொடங்­கி­னார் அவ­ரது கண­வர். மேலும், ஆண் குழந்­தை­தான் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என கண­வர் குடும்­பத்­தா­ரும் தங்­கள் பங்­குக்கு மந்­தீப்பை கொடு­மைப்­படுத்­தத் தொடங்­கி­னர்.

தினந்­தோ­றும் அடி­யும் உதை­யு­மாக கொடு­மைப்­ப­டுத்­திய போதி­லும், கண­வ­ரின் போக்­கைப் பொறுத்­துக்­கொண்டு குடும்­பம் நடத்தி வந்­துள்­ளார் மந்­தீப்.

இந்­நி­லை­யில் சித்­தி­ர­வ­தை­கள் அதி­க­ரிக்­கவே, தன் தந்­தை­யைத் தொடர்­பு­கொண்டு புலம்­பி­யுள்­ளார். தின­மும் மது அருந்­தி­விட்டு கண­வர் தம்மை அடித்­துத் துன்­பு­றுத்­து­வ­தாக மகள் கண்­ணீ­ரு­டன் தெரி­விக்க, மன­மு­டைந்து போன மந்­தீப் கவு­ரின் தந்தை உத்­த­ரப் பிர­தேச மாநில காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார்.

எனி­னும், வழக்­குப் பதிவு செய்­யப்­பட்ட சில நாள்­க­ளி­லேயே மந்­தீப்­பி­டம் அவ­ரது கண­வர் பல­வி­த­மாக கெஞ்சி புகாரை திரும்­பப்­பெற வைத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில்­தான், மந்­தீப் கவுர் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் முடிவை எடுத்­துள்­ளார். தனது மர­ணத்­திற்கு தனது கண­வ­ரும் மாமி­யா­ரும்­தான் கார­ணம் என­வும் இரு­வ­ரும் தம்மை வாழவே விட­வில்லை என்­றும் காணொ­ளிப் பதி­வில் மந்­தீப் குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக தனது கண­வர் அடித்து துன்­பு­றுத்­தி­ய­தா­க­வும் என்­றா­வது ஒரு நாள் கண­வர் மாறு­வார் என்ற நம்­பிக்கை பொய்த்­துப் போய்­விட்­டது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"இனி­மே­லும் சித்தி­ர­வ­தை­களை என்­னால் பொறுத்­துக்­கொள்ள இய­லாது. எனக்­குச் செய்த கொடூ­ரத்­திற்கு எல்­லாம் அவர்­கள் கட­வு­ளி­டம் பதில் சொல்­லியே தீர வேண்­டும். எனவே குழந்­தை­களை விட்­டுச்­செல்ல வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளேன்," என்று காணொ­ளிப் பதி­வில் மந்­தீப் கவுர் உருக்­கத்­து­டன் குறிப்­பிட்­டி­ருப்­பது அதைப் பார்ப்­ப­வர் மன­தைக் கரைய வைக்­கும் வித­மாக உள்­ளது.

இதை­ய­டுத்து, மந்­தீப்­பின் கண­வர் மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என சமூக ஊட­கங்­களில் ஏரா­ள­மா­னோர் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!