‘இந்தியா, உலகின் முன்னணி நாடாக மாற வேண்டும்’

புது­டெல்லி: வள­ரும் நாடு­க­ளுக்கு இந்­தியா ஒரு முன்­னு­தா­ர­ண­மாகத் திகழ்­வ­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்து உள்ளார்.

டெல்­லி­யில் உள்ள அதி­பர் மாளி­கை­யின் கலா­சார மையத்­தில் நேற்று நிதி ஆயோக்­கின் 7வது நிர்­வாக மன்றக் கூட்­டம் நடை­பெற்­றது.

இதில் 23 மாநில முதல்­வர்­கள், மூன்று துணை நிலை ஆளு­நர்­கள், அலு­வல் சார்ந்த உறுப்­பினர்­கள், நிதி ஆயோக்­கின் துணைத் தலை­வர், முழு ­நேர உறுப்­பி­னர்­கள், மத்­திய அமைச்­சர்­கள், சிறப்பு அழைப்­பா­ளர்­கள் உட்­பட பலர் கலந்துகொண்­ட­னர்.

இந்­தக் கூட்­டத்­தில் பேசிய திரு மோடி, கொரோனா தொற்றுக்கு எதி­ரான போராட்­டத்­தில், இந்­தியாவின் ஒவ்­வொரு மாநி­ல­மும் அதன் வலி­மைக்கு ஏற்ப முக்­கிய பங்­காற்­றி­யது என்று குறிப்­பிட்­டார்.

"இந்த கூட்டு நட­வ­டிக்­கை­யின் மூலம் வள­ரும் நாடு­க­ளுக்கு இந்­தியா ஒரு முன்­னு­தா­ர­ண­மாக திகழ்­வ­தற்கு வழி வகுத்­தது. ஜி.எஸ்.டி. வசூலை அதி­க­ரிக்க மத்­திய, மாநில அர­சு­க­ளின் கூட்டு நட­வ­டிக்கை தேவை. நமது பொரு­ளியல் நிலையை வலுப்­படுத்­த­வும், 5 டிரில்­லி­யன் டாலர் பொரு­ளியலாக மாற­வும் இது முக்­கி­ய­மா­னது.

"மேலும், தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி விவ­சா­யத் துறையை நவீ­ன­ம­ய­மாக்க வேண்­டும். அதன் மூலம் விவ­சா­யத் துறை­யில் இந்தியா தன்­னி­றைவு அடைய முடி­யும், உலக அள­வில் முன்­ன­ணி­யில் இருக்க முடி­யும். விரை­வான நக­ர­ம­ய­மாக்­கல் பல­வீ­னத்­திற்­குப் பதி­லாக இந்­தி­யா­வின் பல­மாக மாறும். சமை­யல் எண்­ணெய் உற்­பத்­தி­யில் இந்­தியா தன்­னி­றைவு அடைய வேண்­டும்," என்று பிர­த­மர் மோடி கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!