பீகாரில் பாஜக கூட்டணி உடையும் அபாயம்

பாட்னா: பீகா­ரில் பார­திய ஜனதா கட்சி-ஐக்­கிய ஜனதா தளம் கூட்­டணி எந்த நேரத்­தி­லும் உடை­ய­லாம் என அர­சி­யல் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

அம்­மா­நி­லத்­தில் முதல்­வர் நிதிஷ்­கு­மார் தலை­மை­யில் பாஜக-ஐக்­கிய ஜனதா தளம் கூட்­டணி ஆட்­சி­யில் உள்­ளது.

கடந்த 2020ஆம் ஆண்­டில் பீகா­ரில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தேசிய ஜன­நா­ய­கக் கூட்­டணி மற்­றும் மெகா கூட்­டணி இடையே கடும் போட்டி ஏற்­பட்­டது.

ஆட்­சி­யைப் பிடிக்க 122 தொகுதி களில் வெற்றி பெற்­றாக வேண்­டும். தேசிய ஜன­நா­ய­கக் கூட்­டணி 125 இடங்­களில் வெற்றி பெற்­றது.

இந்­தக் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்று இருந்த பாஜக-74, ஜேடியு-43, விஐபி-4, ஹெச்­ஏ­எம்-4 இடங்­களில் வெற்றி பெற்­றன.

லாலு பிர­சாத் கட்சி மற்­றும் காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான மெகா கூட்­டணி 110 தொகு­தி­களில் வெற்றி பெற்­றது. இந்­தக் கூட்­ட­ணி­யில் ஆர்­ஜேடி-75, காங் கிரஸ்-19, இட­து­சா­ரி­கள்-16 இடங்­களில் வெற்றி பெற்­றன.

லாலு பிர­சாத் யாத­வின் ஆர்­ஜேடி 75 இடங்­களில் வெற்றி பெற்­றா­லும் கூட்­ட­ணி­யில் இருந்த மற்ற கட்­சி­கள் மிக­வும் சொற்­ப­மான இடங்­களைப் பெற்­ற­தால் தேஜஸ்வி யாதவ் முதல்­வ­ரா­கும் வாய்ப்பு நழு­வி­யது.

இதை­ய­டுத்து, ஐக்­கிய ஜனதா தளக்­கட்­சி­யின் நிதிஷ் குமார் முதல் வரா­னார். பாஜக அதிக தொகு­தி­களில் வெற்றி பெற்று இருந்­தா­லும் நிதிஷ் குமா­ரின் ஐக்­கிய ஜனதா தளம் 43 இடங்­க­ளி­ல் வெற்றி பெற்ற நிலை­யில் நிதிஷ்­கு­மார் முதல்­வ­ரா­னார்.

ஆனால் பீகா­ரில் செல்­வாக்­கு­மிக்க கட்­சி­யாக விளங்­கிய நிதிஷ் குமார் கட்­சி­யு­டன் கூட்­டணி வைத்து பாஜக அவ­ரது ஐக்­கிய ஜன­தா­த­ளம் கட்­சி­யை­விட அதிக இடங்­களில் வெற்றி பெற்று அக்­கட்­சியை உற­வாடி அழித்­து­விட்­ட­தாக அப்­போதே குற்­றச்­சாட்டு எழுந்­தது.

மேலும் பாஜ­க­தான் முதல்­வர் நிதிஷ் குமாரை நிய­மித்­துள்­ளது என்­றும் விமர்­சிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில், பீகார் மாநி­லத்­தில் பாஜக-ஐக்­கிய ஜனதா தளம் கூட்­டணி உடை­யும் நிலை­யில் உள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. இது, தேசிய அர­சி­ய­லி­லும் எதி­ரொ­லித்­துள்­ளது.

அண்­மை­யில் பிர­த­மர் மோடி தலை­மை­யில் நடை­பெற்ற பல்­வேறு கூட்­டங்­களில் நிதிஷ் குமார் பங் கேற்­க­வில்லை.

இதற்­கி­டையே காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தியைச் சந்­திக்க நிதிஷ் குமார் நேரம் கேட்­டுள்­ள­தாக மற்­றொரு தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தப் பர­ப­ரப்­பான சூழ்நிலை­யில் இன்று ஐக்­கிய ஜன­தா­தள கட்­சி­யின் எம்.பி., எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் கூட்­டம் நடை­பெறு கிறது. இதில் கூட்­டணி குறித்து முக்கிய முடி­வெ­டுக்­கப்­படும் எனத் தெரி­கிறது.

பாஜக தலை­மை­யி­லான ஜன நாயக கூட்­ட­ணி­யில் இருந்து நிதிஷ் குமா­ரின் ஐக்­கிய ஜனதா தளம் வெளி­யே­றி­னால் அதற்கு ஆர்­ஜேடி (லாலு பிர­சாத் யாதவ் கட்சி), காங் கிரஸ், இட­து­சா­ரி­கள் ஆகிய கட்சி கள் ஆத­ர­வ­ளிக்க வாய்ப்பு உரு­வாகி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!