லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி கைது

ஸ்ரீந­கர்: ஜம்மு-காஷ்­மீ­ரில் ஸ்ரீந­கர் காவல்­துறை, இந்­திய ராணு­வம் இணைந்து நடத்­திய வேட்­டை­யில் லஷ்­கர்-இ-தொய்­பா­வைச் சேர்ந்த பயங்­க­ர­வாதி ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

கைதான நபர் சங்­கம் புத்­காம் பகு­தியைச் சேர்ந்த ஆர்­ஷித் அக­மது என்­பது என தெரிய வந்­துள்­ளது. அவ­ரி­டம் இருந்து ஐந்து கைத் துப்­பாக்­கி­கள், 5 தோட்டா உறை­கள், 50 தோட்­டாக்­கள் உள்­ளிட்ட ஆயு­தங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. மேலும் 2 கையெறி குண்­டு­களும் கைப்­பற்­றப்­பட்­டு­உள்­ளன. இது­தொ­டர்­பாக ஷால்­தெங் காவல் நிலை­யத்­தில் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டது.

புதிய உத்­தி­களில் ‘ஹைபி­ரிட்’ எனச் சொல்­லப்­படும் பயங்­கர வாதி­கள் பட்­டி­ய­லில் இருப்­ப­தில்லை. அவர்­களை ஒன்று அல்­லது இரண்டு முறை மட்­டுமே தாக்­கு­தல் நடத்த பயங்­க­ர­வாத குழு­வி­னர் பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­ற­னர். கடந்த 2021ஆம் ஆண்­டில் காஷ்­மீ­ரில் பொது­மக்­கள், காவ லர்­கள், அர­சி­யல் கட்­சித் தொண்­டர்­கள், சிறு­பான்மை சமூக மக்­கள் என பலரை இலக்­காகக் கொண்டு 20க்கும் மேற்­பட்ட தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டன.

இந்­தத் தாக்­கு­தல்­களில் ‘ஹைபி­ரிட்’ பயங்­க­ர­வா­தி­களே ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இந்த ‘ஹைபி­ரிட்’ பயங்­க­ர­வாதி களை அடை­யா­ளம் காண்­ப­தும் பயங்­க­ர­வாத குழு­வி­னர் அவர்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தைத் தடுத்து நிறுத்­து­வ­தும் பெரும் சவா­லாக இருப்­ப­தாக காவ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!