மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

புது­டெல்லி: மின்­சார சட்­டத் திருத்த மசோ­தா­வுக்கு எதிர்க்­கட்­சி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன.

இதை­ய­டுத்து, மக்­க­ள­வை­யில் நேற்று முன்­தி­னம் தாக்­கல் செய்­யப்­பட்ட இந்த மசோதா நாடா­ளு­மன்ற நிலைக்­கு­ழு­வின் ஆய்­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­ய­கர் தெரி­வித்­தார்.

மின்­சா­ரத்தை தனி­யார் மய­மாக்­கு­வதை அனு­ம­திக்­கும் வகை­யில் இந்த மசோதா அறி­மு­கப்­ப­டுத்­தப் படு­வ­தாக எதிர்க்­கட்­சி­கள் சாடி உள்­ளன.

இந்த மசோதா நிறை­வேற்­றப்­படும் பட்­சத்­தில், தொலை­பேசி இணைப்பு, இணையச் சேவை­களுக்கு ஒரு நிறு­வ­னத்தைத் தேர்வு செய்­வ­து­போல் மின்­சா­ரத்­துக்­கும் ஒரு நிறு­வ­னத்தை வாடிக்­கை­யா­ளர்­கள் தேர்வு செய்­ய­மு­டி­யும் என்­றும் இத­னால் மக்­கள் ஆதா­ய­ம­டை­வர் என்­றும் அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் மக்­க­ள­வை­யில் 2022ஆம் ஆண்­டுக்­கான மின்­சார சட்­டத் திருத்த மசோ­தாவை மத்­திய மின்­சா­ரத் துறை அமைச்­சர் ஆர்.கே.சிங் அறி­மு­கம் செய்­தார்.

அப்­போது எதிர்க்­கட்சி உறுப்­பினர்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். இந்த மசோதா அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் கூட்­டாட்சித் தத்­துவத்­துக்கு எதி­ரா­னது என அவர்­கள் தெரி­வித்­த­னர்.

புதிய சட்­டம் தொடர்­பாக மாநில அர­சு­க­ளு­டன் விரி­வான ஆலோ­சனை செய்­வது மத்­திய அர­சின் கடமை என்­றும் அவ்­வாறு ஆலோ­சிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் எதிர்க்­கட்­சி­கள் சுட்­டிக்­காட்­டின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!