அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியா வளர்ந்த தேசமாகும்: பிரதமர் மோடி 

அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியா வளர்ந்த தேசமாக மாறும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார். தற்காப்பு, மின்னிலக்க தொழில்நுட்பம், மின்சக்தி ஆகியவற்றில் உள்நாட்டு உற்பத்தியை ஆதரிக்கும் திட்டங்களையும் அவர் கோடிகாட்டினார். 

புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார் திரு மோடி. 

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் பங்களிக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

இந்தியாவின் குடித்தன தனிநபர் மொத்த தேசிய வருமானம் 1,086 டாலருக்கும் 4,255 டாலராக்கும் இடைப்பட்டது. இது கீழ்-நடுத்தர வருமான பொருளியலாக உலக வங்கி வகைப்படுத்துகிறது. ஒப்புநோக்க வளர்ந்த நாடான அமெரிக்காவில் வருமானம் கிட்டத்தட்ட $13,205. 

இந்தியாவின் பொருளியல் உலகில் ஆறாவது நிலையில் உள்ளது. இந்த நிதியாண்டில் அது ஏழு விழுக்காடு வளரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

2050க்குள் நாட்டின் பொருளியல் அமெரிக்கா, சீனா ஆகியறவற்றை அடுத்து மூன்றாவது நிலையை பிடிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!