மருத்துவரைத் தாக்கிய முதல்வர் மகள்

அய்ஸ்வால்: மிசோராம் மாநிலத்தில் முதல்வரின் மகள் மருத்துவரை சரமாரியாகத் தாக்கியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

முதல்வர் ஸோரம் தங்காவின் மகள் மிலாரி சாங்டே அண்மையில் தமது தோல் நோய்ப் பிரச்சினைக்காக மருத்துவ மனைக்குச் சென்றுள்ளார்.

எனினும், அங்குள்ள சிறப்பு மருத்துவரைச் சந்திக்க அவர் முன்பதிவு செய்யவில்லை. இதையடுத்து, அவர் மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கோபமடைந்த மிலாரி, மருத்துவரின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து அவரை சரமாரி யாகத் தாக்கினார். இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவலானது. சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் மருத்துவர்கள் நேற்று கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தம் மகளின் செயலுக்காக மன்னிப்பு கோருவதாக முதல்வர் ஸோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!