கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான இந்திய தடுப்பூசி

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா தயாரித்துள்ளது. உலகின் ஆகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறு­வ­னம் இதை உருவாக்கியுள்ளது. கூடியவிரைவில் தடுப்பூசி விற்பனைக்கு வரும் என நிறுவனமும் இந்திய அரசாங்கமும் தெரிவித்துள்ளன.

உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் அடங்கும். 2020ல் 600,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். 342,000 பேர் இதனால் மாண்டனர். பெரும்பாலும் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் உள்ள பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

தற்போது மெர்க் & கோ, ஜிஎஸ்கே ஆகிய இரு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கின்றன.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண்கள் இந்நோயால் மடிவதை குறைக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி உதவும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நம்புகிறது.

ஒவ்வொரு தடுப்பூசியும் 200லிருந்து 400 ரூபாய்க்கு விற்கப்படும். அடுத்த ஈராண்டுகளில் 200 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஒன்பது வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!