நித்தம் நித்தம் எங்களுக்கு சுத்தமே சோறுபோடுகிறது

சனிக்கிழமை

ஒரு சாமானியர்

உடல் தூய்மையாக இருக்க தண்ணீர் வேண்டும்; உள்ளம் தூய்மையாக இருக்க உண்மை வேண்டும்: ஊர் தூய்மையாக இருக்க நாங்கள் வேண்டும் என்கிறார்கள் ஜெயா, கலைச்செல்வி, கணேசன் என்ற மூன்று கிராம

பஞ்சாயத்து துப்புரவாளர்கள்.

செய்தி &

படங்கள்:

எம். கே. ருஷ்யேந்திரன்

சுத்­தம் சோறுபோடும் என்­பார்­கள். எங்­க­ளைப் பொறுத்­த­வரை நித்­தம் நித்­தம் சுத்­தம்­தான் சோறு­போ­டு­கிறது என்று ஒரே நேரத்­தில் மூன்று பேரும் சேர்ந்து சொன்­னார்­கள்.

மயி­லா­டு­துறை அருகே அரு­வா­ப்படி என்ற கிரா­மப் பஞ்­சா­யத்து இருக்­கிறது. அந்த நிர்­வா­கத்­தின்­கீழ் துப்­பு­ர­வா­ளர்­க­ளாக அந்த மூவரும் வேலை பார்க்­கி­றார்­கள்.

திரு­மதி ஜெயா, 50, திரு­வாட்டி கலைச்­செல்வி, 57, திரு டி. கணேசன், 60, என்ற இந்த மூவரும் உள்­ளூர்­வா­சி­கள்.

பஞ்­சா­யத்­துக்கு உட்­பட்ட கிரா மங்­களை, பிர­தான சாலை­களை எப்­போ­தும் குப்­பை­க்கூ­ளம் இல்லா மல் சுத்­த­மா­கப் பரா­ம­ரித்து வர­வேண்­டி­யது இவர்­க­ளின் பொறுப்பு.

அந்­தப் பஞ்­சா­யத்­துக்கு உட்­பட்ட வைபட்­ட­வர்த்தி என்ற கிரா­மத்­தில் துப்­பு­ர­வுப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த மூவ­ரை­யும் சந்­தித்­தேன்.

"பஞ்­சா­யத்­தில் நாங்­கள் மூன்று பேர்­தான் இந்த வேலை­யைப் பார்க்­கி­றோம். நான்கு தள்ளுவண்டிகள் உள்ளன. நாங்­கள் அணிந்­து­கொள்ள உடை கொடுத்து இருக்­கி­றார்­கள். கையு­றை­கள், முகக்­கவசம் இப்போதெல்லாம் எப்­போ­தா­வதுதான் கொடுக்கிறார்கள்.

"நாள்­தோ­றும் காலை 8 மணிக்கு வேலையைத் தொடங்­கு­வோம். எங்கள் பஞ்­சா­யத்­துக்கு உட்­பட்ட பல கிரா­மங்­க­ளின் வீடுகளில், வீதி­களில், பொது இடங்­களில் கிடக்­கக்­கூ­டிய குப்பை­களை எல்­லாம் பொறுக்கி எடுத்து அவற்றை மக்கும் குப்­பை­கள், மக்­காத குப்­பை­கள், பிளாஸ்­டிக் போத்­தல்­கள், ஹோட்­டல்­களில் விர­ய­மாகும் உணவு எச்­சங்­கள் எனத் தனித்­தனியே பிரித்து அவற்றைக் குறிப்­பிட்ட இடத்தில் கொண்டு சேர்க்க வேண்­டும்.

"அவற்றைப் பஞ்­சா­யத்து நிர்­வா­கம் தனித்தனியே விற்­று­வி­டு­ம்.

"பிற்­ப­கல் 2 மணிக்கு வேலை முடி­யும். ஞாயிற்­றுக்­கி­ழமை ஒரு நாள்­தான் விடுப்பு. பஞ்­சா­யத்­தின் கீழ் உள்ள ஊரில் எங்­கேயா­வது திரு­ம­ணம் நடந்­தால், யாரா­வது மர­ண­ம­டைந்­து­விட்­டால், அர­சி­யல் தலை­வர்­கள் யாரே­னும் வந்­தால், திருவிழாக்­கள் ஏதே­னும் நடந்­தால், சாலை ஓரத்­தி­லும் கிராம தெரு ஓரங்­களிலும் கிரு­மி­நா­சினி மாவு தெளிக்க வேண்­டும்.

"இத்­த­கைய நாள்­களில் கூடு­தலாக சில மணி நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்­கும். மாதச் சம்­ப­ளம் ரூ.3,600 கொடுக்­கி­றார்கள். பணம் வங்கிக்கணக்­கில் வரும்.

"அதை நிர்­வா­கத்­தைச் சேர்ந்த ஒரு­வர் எடுத்து எங்­க­ளுக்குக் கொடுக்­கிறார். செல­வு­போக ரூ.3,400 தேறும்," என்று அந்த மூவ­ரும் கூறி­யதைச் செவி­ம­டுத்த நான், எஞ்சிய ரூ.200 என்ன ஆகும் என்று கேட்­டேன். அதற்கு ஒரு­வரும் பதில் சொல்­ல­வில்லை.

அந்த மூவ­ரில் ஒரு­வ­ரான திரு­மதி ஜெயா­வுக்கு நான்கு மகள்­கள்.

"நாங்­கள் ஏழை­கள். அற்­றைக்­கூலி ஊழி­யர்­கள். என் புதல்­வி­கள் திரு­ம­ண­மாகி வெளியூர் சென்­று­விட்­டார்­கள். பெண்­களின் திரு­மணத்திற்காகவும் எங்­களின் சிறு குடிசை வீட்டை பழுது­பார்க்­க­வும் பல ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் கடன் வாங்­கினேன். அதை நானும் என் கண­வரும் இன்­ன­மும் அடைத்து வரு­கி­றோம்," என்று கூறி­னார் திரு­மதி ஜெயா.

இந்த நேரத்­தில் குறுக்­கிட்ட திரு­வாட்டி கலைச்­செல்வி, தனது நான்கு மகள்­களில் இரண்டு பேருக்குத் திரு­ம­ணம் ஆகி­விட்­ட­தா­க­வும் மற்ற இரண்டு பேரும் தன் ஆத­ர­வில் இருப்­ப­தா­க­வும் கூறினார்.

தன்­ ஒரே மகன் படித்து வரு­கி­றான் என்­றும் கூறிய இந்த மாது, நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன் தன் கண­வர் மர­ண­ம­டைந்து­விட்­ட­தா­கத் தெரி­வித்­தார். இவ­ரு­டன் இருந்த டி. கணேசன் என்ற முதி­ய­வ­ருக்கு ஆறு மகள்கள். நான்கு பேருக்கு மண­மாகிவிட்டது. இன்­னும் இரு மகள்­க­ளைக் கரையேற்ற வேண்டும்.

"நான் பஞ்­சா­யத்­தில் துப்­பு­ர­வா­ள­ராக வேலை பார்க்­கி­றேன். என்­மனைவி நாள் சம்­ப­ளத்­துக்கு ஏதா­வது வேலை பார்த்து சம்­பா­திப்­பார்.

"எங்­க­ளுக்கு இந்த வேலை­யை­விட்­டால் வேறு கதி­யில்லை. 100 நாள் வேலை போன்ற இதர வேலை திட்­டங்­களில் நாங்­கள் சேர முடி யாது. எங்­களை பஞ்­சா­யத்து நிர்­வா­கம் விடு­விக்­காது," என்றார்.

"கொரோனா வந்­த­ பிறகு எங்­களின் முக்­கி­யத்­து­வம் கூடி­யது. சீருடை கொடுத்­தார்­கள். முகக்­கவசம், கையு­றை­கள் கொடுத்­தார்­கள். சம்­ப­ளத்தை 1,000 ரூபாய் கூட்­டி­யதால் ரூ.3,600 கிடைக்கிறது.

"இப்­போ­தெல்­லாம் வேலை மிகக் கடு­மை­யா­கி­விட்­டது. நாள்தோறும் சரா­ச­ரி­ 20 கி.மீ. நடக்­கிறோம். சாப்­பாட்­டுக் கடை நடத்­து­வோர் எச்­சத்தை சாலை­யோ­ரம் கொட்டிவிடு­கிறார்கள். குடிகாரர்கள் போத்­தல்­களை­யும் பிளாஸ்­டிக் கோப்பை களையும் கண்ட இடங்களில் போட்டுவிட்டுப் போவார்­கள்.

"இது ஒரு­பு­றம் இருக்க, நாய், பூனை, பன்றி, பற­வை­கள் பொது இடங்களில் மாண்­டு­கி­டந்­தால் அதை­யும் நாங்­கள்தான் எடுத்து அடக்­கம் செய்ய வேண்­டும்.

"வீடுகளிலும் இப்போதெல்லாம் அதிக குப்பைகள் சேர்கின்றன. அவற்றை வீட்டுக்கு வெளியே அப்படியே வைத்துவிடுவார்கள்.

"மக்கிய குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் போத்தல்கள் எல்லாவற்றையும் நாங்கள்தான் பிரித்து எடுக்கவேண்டும்.

"வெய்­யி­லிலும் மழை­யி­லும் குப்பையோடு குப்­பை­யாக நாங்­கள் படும்­பாடு கொஞ்ச நஞ்­ச­மல்ல. அன்­றா­டம் உயி­ரை­விட்டு பிழைக்­கிறோம்," என்று கூறிய மூவ­ரும் தங்கள் மாதச் சம்பளம் ரூ.5,000 ஆகக் கூடினால் அதுவே போதும் என்றார்கள். நிறைய குப்பை கிடக்­கிறது; வேலை இருக்­கிறது; பேச நேர­மில்லை, என்று சொல்லி என்னிடம் இருந்து உடனே விடை­பெற்­றுக்­கொண்டு நகர்ந்தார்கள்.

'கண்­ட­படி குப்­பை­களைப் போடாதீர் என்று நாங்­கள் சொல்­வதை யாரும் கேட்­கப்போவ­தில்லை;

'எங்கள் சிர­மத்தைப் பஞ்சாயத்து நிர்­வாகம் புரிந்துகொள்ளப்போவ தில்லை;

'எங்­களுக்காக குரல் கொடுக்க யாரும் முன்­வரப்­போ­வ­தும் இல்லை என்று அவர்­கள் சொல்­லிக்­கொண்டே போனது என் காதில் கேட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!