யுனெஸ்கோ பட்டியலில் 3 நகரங்கள்

புது­டெல்லி: ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் யுனெஸ்கோ அமைப்பு, அனைத்­து­லக அள­வி­லான கற்­றல் நக­ரங்­கள் பட்­டி­ய­லில் இந்­திய நக­ரங்­கள் மூன்றை இணைத்­துள்­ளது. கேர­ளா­வின் திருச்­சூர், நிலாம்­பூர், தெலுங்­கானா மாநி­லத்­தின் வாரங்­கல் ஆகி­யவை அவை.

உலக நிறு­வ­னத்­தின் கல்வி, அறி­வி­யல், கலா­சார அமைப்­பான யுனெஸ்கோ, பல்­வேறு நாடு­களில் கடைப்­பி­டிக்­கப்­படும் நீண்­ட­கா­லக் கற்­றல்­மு­றையை அங்­கீ­க­ரிக்­கும் விதத்­தில் சிறந்த கல்­வி­மு­றை­யைக் கொண்­டி­ருக்­கும் நக­ரங்­க­ளைப் பட்­டி­ய­லி­டு­கிறது.

தற்­போது 44 நாடு­க­ளைச் சேர்ந்த 77 நக­ரங்­கள் இந்­தப் பட்­டி­ய­லில் இணைக்­கப்­பட்­டுள்­ளன. இந்­திய நக­ரங்­கள் மூன்­று­டன் உக்­ரே­னி­யத் தலை­ந­கர் கியவ், தென்­னாப்­பி­ரிக்­கா­வின் டர்­பன், ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளின் ஷார்ஜா ஆகிய நக­ரங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இத­னை­ய­டுத்து மொத்­தம் 76 நாடு­க­ளைச் சேர்ந்த 294 நக­ரங்­கள் இந்­தப் பட்­டி­ய­லில் உள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

கற்­பித்­தல் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை நீண்­ட­கா­லம் தொடர்ந்து மேற்­கொள்­வ­தில் நக­ரங்­க­ளுக்கு முக்­கி­யப் பங்கு இருப்­ப­தா­கக் கூறிய யுனெஸ்கோ உலக மக்­கள்­தொ­கை­யில் 50 விழுக்­காட்­டி­னர் நக­ரங்­களில் வசிப்­ப­தைச் சுட்­டி­யது. அதை முன்னிட்டே சிறந்த கற்பித்தல் நடைமுறைகளைப் பின்பற்றும் நகரங்களுக்கு இத்தகைய அங்கீகாரம் அளிக்கப்படுவதாக அது குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!