இந்தியா, ஆஸி இடையே ஒப்பந்தம்

விண்வெளித்துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

பெங்களூரு: இந்­தியா, ஆஸ்­தி­ரே­லி­யா இடையே விண்­வெ­ளித் துறை­யில் உள்ள தொடர்பை மேலும் வலுப்­ப­டுத்­தும் வித­மாக புதிய ஒப்பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின.

பெங்களூ­ரில் நடை­பெற்ற விண்­வெளி மாநாட்­டின்­போது, ஆஸ்­தி­ரே­லியாவின் சில புத்­தாக்­கத் தொழில் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்ற இஸ்‌ரோ முடிவு செய்­துள்­ளது என்­றும் மேலும் சில நேரங்­களில் இந்­திய செயற்­கைக்­கோள்­களை ஏவ­வும் ஆஸ்­தி­ரே­லியா தயா­ராக உள்­ளது என்­றும் இஸ்‌ரோ தலை­வர் சோம்­நாத் செய்தியாளர்களிடம் தெரி­வித்­தார்.

பெங்­க­ளூரு மாநாட்­டில் இரு நாடு­க­ளி­லும் செயல்­பட்டு வரும் ஆறு விண்­வெளி நிறு­வ­னங்­கள் இடையே ஒப்­பந்­தங்கள் கையெ­ழுத்தாகின.

இதை­ய­டுத்து, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இருந்து வந்­துள்ள குழு­வி­னர் இந்­திய விண்­வெளி ஆய்­வுக்­க­ழ­கத்­தின் ககன்­யான் திட்ட மையம், செயற்­கைக்­கோள் ஒருங்­கி­ணைப்பு மையத்தை பார்­வை­யிட்­ட­னர்.

அங்கு அதன் தலை­வர் சோம்­நாத்தைச் சந்­தித்து உரை­யா­டி­னர். அப்­போது விண்­வெ­ளித்­து­றை­யில் இந்­தி­யா­வு­ட­னான ஒத்­து­ழைப்பை அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

ஆஸ்திரேலிய விண்வெளி மையத் தலைவர் என்ரிகோ பலேமர், இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் மார்ட்டின் வன்டென் பெர்க் ஆகியோர் இஸ்ரோ மையத்தை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

"இந்தியாவின் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தற்காலிக தரை கட்டுப்பாட்டு மையம் அமைப்பது குறித்து அவர்கள் தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செயற்கைக்கோள் புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி புவி கண்காணிப்பு, செயற்கைக்கோள், விண்வெளி குறித்த விழிப்புணர்வு, வானிலை காலநிலை ஆய்வுகள் மேற்கொள்வதில் இணைந்து செயல்படுவது குறித்தும் அவர்கள் விவாதித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!