கிணற்றுக்குள் பாய்ந்த கார்; கல்லூரி மாணவர்கள் மூவர் பலி

வட­வள்ளி: நான்கு கல்­லூரி நண்­பர்­கள் பய­ணம் செய்துகொண்­டி­ருந்த கார் ஒன்று நேற்று அதி­காலை நேரத்­தில் கிணற்­றுக்­குள் விழுந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில், மூன்று மாண­வர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

விபத்­தில் பலி­யான நந்­த­னன் என்ற மாண­வர் குத்­துச்­சண்டை வீரர் ஆவார்.

கோவை மாவட்டம், வட­வள்ளி நவா­வூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் விக்­னேஸ் பாபு. இவ­ரது மகன் ஆதர்ஸ், 18, தனி­யார் பொறி­யி­யல் கல்­லூ­ரி­யில் படித்து வந்­தார்.

இவ­ரும் இவ­ரது மற்ற நண்­பர்­க­ளான ரோஷன், 19, ரவி­கி­ருஷ்­ணன் 18, நந்­த­னன் 18 ஆகி­யோ­ரும் கோவை, பூலு­வப்­பட்­டி­யில் உள்ள தங்­கும் விடு­தி­யில் தங்கி ஓணம் பண்­டி­கை­யைக் கொண்­டா­டி­னர்.

இர­வில் அங்­கேயே தங்­கி­விட்ட­ அ­வர்­கள், கல்­லூ­ரிக்­குச் செல்ல வேண்­டும் என்­ப­தால் நேற்று அதிகாலை நேரத்திலேயே நண்பர்கள் நால்­வ­ரும் ஒரு காரில் வட­வள்­ளிக்குப் புறப்­பட்­ட­னர். காரை ரோஷன் ஓட்டினார்.

வட­வள்ளி நோக்கி வேகமாக வந்­து­கொண்டு இருந்த கார், தென்­ன­ம­நல்­லூர் கரி­ய­கா­ளி­யம்­மன் கோவில் அருகே கட்­டுப்­பாட்டை இழந்து தாறு­மா­றாக ஓடி­யது.

சாலை­யோ­ரம் உள்ள தோட்­டத்­தின் இரும்­புக்கேட்டை உடைத்­துக்­கொண்டு தோட்­டத்­துக்­குள் புகுந்­த கார், அங்கிருந்த 100 அடி ஆழ­முள்ள கிணற்­றுக்­குள் வேக­மாகப் பாய்ந்­தது.

ரோஷன் காரை ஓட்டி வந்­த­தால் அவர் மட்­டும் கதவை உடைத்­துக் கொண்டு தப்­பி­னார்.

ஆனால், மற்ற மூவ­ரால் காருக்­குள் இருந்து வெளியே வரமுடி­ய­வில்லை.

ஆதர்ஸ், ரவி, நந்­த­னன் ஆகிய மூவ­ரும் காருக்­குள்­ளேயே மூச்­சுத்­தி­ணறி உயிரிழந்தனர்.

ரோஷன் நடந்த சம்­ப­வத்தை அந்தப் பகு­தி­யி­ன­ரி­டம் தெரி­வித்து உதவி கேட்­டார்.

பாழ­டைந்த கிணற்றில் 40 அடிக்கும் மேல் தண்­ணீர் நிரம்பி கிடந்­த­தால், யாரா­லும் உட­ன­டி­யாக மீட்­புப் பணி­யில் ஈடு­பட முடி­ய­வில்லை.

மேலும் காரும் தண்­ணீ­ரில் ஆழ­மாக மூழ்கி இருந்­தது.

காவ­லர்­கள், தீய­ணைப்­புத்­து­றை­யி­ன­ருக்­கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

ராட்­சத கிரேன் கொண்­டு­வ­ரப்­பட்டு மீட்புப் பணி நடந்­தது.

மீட்­கப்­பட்ட உடல்­கள் கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வு பரி­சோ­த­னைக்­காக கொண்டு செல்­லப்­பட்­டன.

விபத்து குறித்து காவலர்கள் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!