சக்கர நாற்காலியில் தாயின் சடலத்தை எரியூட்டச் சென்ற மகன்

மணப்பாறை: திருச்சி அருகே தோல்­நோ­யால் பாதிக்­கப்­பட்டு, இறந்­து­போன தாயின் உடலை சக்­கர நாற்­கா­லி­யில் வைத்து மயா­னத்­திற்கு கொண்­டு­சென்று அடக்­கம் செய்த சம்­ப­வம் பல­ரை­யும் அதிர்ச்சி அடைய வைத்­துள்­ளது.

திருச்சி மாவட்­டம், மணப்­பாறை பகு­தி­யைச் சேர்ந்­த­வர் பெரி­ய­சாமி, 80. இவ­ரது மனைவி ராஜேஸ்­வரி, 74. இவர்­க­ளது மகன் முரு­கா­னந்­தம், 50.

இந்­நி­லை­யில், கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு தோல் நோய் கார ணமாக ராஜேஸ்­வ­ரி­யின் உடல்­நலம் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், அவரை முரு­கா­னந்­தம் தொடர்ந்து பரா மரித்து வந்­துள்­ளார்.

எனி­னும், உடல் முழு­வ­தும் அரிப்பு ஏற்­பட்டு புண்­ணான நிலை­யில் அந்­தத் தொற்று மேலும் பரவ வாய்ப்­புள்­ளது என மருத்­து­வ­ம­னை­யின் தரப்­பில் தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால், தாயைக் கவ­னிப்ப தற்­காக பெரும்­பா­லான நாள்­கள் வேலைக்­குச் செல்­லா­மல் கையில் பண­மும் இல்­லா­மல் வறு­மை­யில் வாடி­யுள்­ளார் முரு­கா­னந்­தம்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் ராஜேஸ்­வரி இறந்­து­போ­னார்.

என்ன செய்­வ­தென்று தெரி­யா­மல் தவித்த முரு­கா­னந்­தம், தன் தாய்க்கு இறு­திச் சடங்­கு­கள் செய்ய உற­வி­னர்­கள், ஊர் மக்­கள் வர­மாட்­டார்­கள் எனக் கருதினார்.

இதனால், தன் தாயின் உடலை அவர் பயன்­ப­டுத்­தும் சக்­கர நாற்­கா­லி­யில் வைத்து துணி­க­ளால் போர்த்­திக் கட்டி தனி­யா­கவே தாயை அடக்­கம் செய்­து­விட முடி­வெ­டுத்து, வீட்­டில் இருந்து 3 கி.மீ. தூரத்­தி­லுள்ள மணப்­பாறை நக­ராட்சி மயா­னத்­தின் எரி­வாயு தகன மேடைக்கு தனி ஒரு­வ­ராக தள்ளி வந்­து, முறைப்­படி இறுதிச் சடங்­கு­கள் செய்து அடக்­கம் செய்­தார்.

இந்­நி­லை­யில், இடுகாட்­டின் அருகே உள்­ள­வர்­கள் சக்­கர நாற்­கா­லி­யில் வந்­திருந்த மூதாட்­டி­யின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!