உச்ச நீதிமன்றம் கேள்வி: நீதிகேட்டுக் குரல் எழுப்பியதை எப்படி குற்றமாகக் கருதலாம்

புது­டெல்லி: நீதி கேட்­டுக் குரல் எழுப்­பு­வது எப்­படி சட்­டத்­தின் பார்­வை­யில் கிரி­மி­னல் குற்­ற­மா­கும் என்று சித்­திக் கப்­பன் வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

நாட்­டையே உலுக்­கிய ஹத்­ராஸ் பாலி­யல் வன்­கொ­டுமை, கொலை வழக்கு குறித்து செய்தி சேக­ரிக்­கச் சென்ற கேர­ளச் செய்­தி­யா­ளர் சித்­திக் கப்­பன் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்­டார்.

ஈராண்­டுக்­குப் பின்­னர் நேற்று முன்­தி­னம் அவ­ருக்கு உச்ச நீதி­மன்­றம் பிணை­யில் வெளி­வர அனு­மதி வழங்­கி­யது.

இதற்­கான மனுவை உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி யு. யு. லலித் தலை­மை­யி­லான அமர்வு விசா­ரித்­தது.

விசாரணையில் மனுதாரர் சித்திக் கப்பன், பாதிக்கப்பட்டவருக்கு நீதிகேட்டுக் குரல் எழுப்பியதை எப்படி கிரிமினல் குற்றமாகக் கருதலாம் என்று தலைமை நீதிபதி கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அரசாங்க வழக்கறிஞர் சித்திக்கும் அவரது நண்பர்களும் சமய மோதல்களை உருவாக்கும் எண்ணத்துடன் ஹத்ராஸ் சென்றதாகக் கூறினார். அவர்கள் சென்ற வாகனத்தில் போராட்டங்களை ஊக்குவிக்கும் துண்டுப் பிரசுரங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வழக்கில் சித்திக் கப்பனுக்கு பிணை வழங்கப்படும் என்று அறிவித்த நீதிபதிகள், "அவர் இந்த பிணைக் காலத்தின் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் தொடர்புகொள்ள முயலக் கூடாது. கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும். முதல் ஆறு வாரங்களுக்கு டெல்லி நிஜாமுதீன் காவல் நிலையத்தில் வாரம் ஒரு நாள் கையெழுத்திட வேண்டும். அதன் பின்னர் கேரளாவின் மலப்புரம் மாவட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்," என்று கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!