கால்நடைகளைப் பாதிக்கும் தோல் கழலை நோய்க்கு தடுப்பூசி

புது­டெல்லி: கால்­ந­டை­களை பாதிக்­கும் தோல் கழலை (லம்பி ஸ்கின்) நோய்க்கு கடந்த ஒரு மாதத்­தில் மட்­டும் ஐந்­தா­யி­ரத்துக்கும் மேற்­பட்ட விலங்­கு­கள் பலி­யாகி உள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­திய விஞ்­ஞா­னி­கள் அய­ராது பாடு­பட்டு இந்­நோய்க்கு உள்­நாட்­டி­லேயே தடுப்­பூ­சி­யைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர் என்று அனைத்­து­லக பால் பண்ணை கூட்­ட­மைப்­பின் உலக பால்­வள உச்சி மாநாட்­டில் பேசி­ய­போது பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார்.

கால்­ந­டை­க­ளின் உயி­ரி­ழப்­பு­க­ளைத் தடுக்க மத்­திய அரசு பல்­வேறு மாநில அர­சு­க­ளு­டன் இணைந்து தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தாக தெரி­வித்த அவர், 2025ஆம் ஆண்­டுக்­குள் கால்­ந­டை­க­ளுக்கு ஏற்­படும் நோய்­களுக்கு உலக அள­வில் ஒருங்­கி­ணைந்த தடுப்­பூசித் திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என இந்­தியா தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­வ­தாக கூறி­னார். எதிர்­வ­ரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் பால் பண்­ணைத் துறை­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களில் 70 விழுக்­காட்­டி­னர் பெண்­கள் என்­பது சிறப்­புக்­கு­ரிய அம்­சம் என்­றும் இந்­திய பால் பண்­ணைத் தொழி­லின் உண்­மை­யான உரி­மை­யா­ன­வர்­க­ளாக அவர்­கள் விளங்­கு­வ­தா­க­வும் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

"கால்­ந­டை­க­ளுக்கு கிருமித்­தொற்­றால் உண்­டா­கும் புரூசெலோசிஸ், பாதம், வாய் பகுதிகளை தாக்­கும் நோய்­க­ளுக்கு எதி­ராக பாது­காப்பை வழங்­கும் வகையில் 100% தடுப்­பூ­சி­யைப் போட வேண்டும். இந்த பத்தாண்டுகளுக்­குள் கால்­நடை­களை இந்த வகை நோய்த் தாக்­கு­தல்­களில் இருந்து மீட்­பதை இலக்­காகக் கொண்டு செயல்­பட வேண்­டும்," என்றார் பிர­த­மர் மோடி.

2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பால் உற்பத்தி 44% அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2014ல் 14.6 கோடி டன்னாக இருந்த பால் உற்பத்தியானது, தற்போது 21 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!