‘பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த முடியாது’

புதுடெல்லி: பயங்­க­ர­வா­தச் செயல்­களை ஒரு­போ­தும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர் (படம்) கூறி­யி­ருக்­கி­றார்.

சுவிட்­சர்­லாந்­தின் ஜெனிவா நக­ரில் நடை­பெ­றும் ஐக்­கிய நாட்­டுப் பொதுச்­ச­பை­யின் 77வது உச்­ச­நிலை மாநாட்­டில் அவர் உரை­யாற்­றி­னார்.

“நீண்ட கால­மாக எல்லை தாண்­டிய பயங்­க­ர­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள இந்­தியா, பயங்­க­ர­வா­தத்­தைச் சிறி­த­ள­வும் சகித்­துக் கொள்ள முடி­யாது என்­பதை உறு­தி­யாக வலி­யு­றுத்தி வரு­கிறது.

“எத்­த­கைய பயங்­க­ர­வா­தச் செய­லை­யும், அதன் அடிப்­ப­டைக் கார­ணம் எவ்­வ­ளவு உய­ரி­யது என்று கூறிக்­கொண்­டா­லும், அதனை நியா­யப்­ப­டுத்த முடி­யாது என்­பதே இந்­தி­யா­வின் நிலைப்­பாடு,” என்­றார் அவர்.

உலக நாடு­கள் அடை­யா­ளம் காட்­டிய பயங்­க­ர­வா­தி­க­ளுக்­குப் பரிந்து பேசும் நாடு­கள் அத­னால் தங்­கள் சொந்த நல­னுக்கோ தங்­கள் நற்­பெ­ய­ருக்கோ எந்த நற்­ப­ல­னை­யும் அடை­யப்­போ­வ­தில்லை என்­றார் அமைச்­சர்.

பாகிஸ்­தா­னில் இருந்து இந்­தி­யா­வுக்கு எதி­ரா­கச் செயல்­பட்டு வரும் பயங்­க­ர­வா­தி­கள், லஷ்கா்-இ-தொய்பா போன்ற பயங்­க­ர­வா­தக் குழுக்­களை கறுப்­புப் பட்­டி­ய­லில் சேர்க்­கும் வித­மாக இந்­தியா ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தில் கொண்­டு­வந்த தீா்மானங்­களை, சீனா தனது ‘வீட்டோ’ அதி­கா­ரத்­தால் நிரா­க­ரித்­ததை ஜெய்­சங்கா் மறை­மு­க­மா­கச் சுட்டிக்­காட்­டி­னார்.

ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான போர் குறித்­துப் பேசிய அமைச்­சர் ஜெய்சங்கர், இந்­தியா அமை­தி­யின் பக்­கம் இருப்­ப­தா­க­வும் இருதரப்­பும் பேசி விரை­வாக நல்ல தீர்வை எட்­டு­வ­தையே இந்­தியா விரும்­பு­கிறது என்­றும் தமது உரையில் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!