சீன நிறுவனத்திடம் ரூ.5,551 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

புது­டெல்லி: அன்­னி­யச் செலா­வணி சட்­டத்தை மீறிச் செயல்­பட்ட சீன கைப்­பேசி நிறு­வ­னத்­தின் ரூ.5,551 கோடியை மத்­திய அம­லாக்­கத்­துறை பறி­மு­தல் செய்­துள்­ளது.

சீனா­வைச் சேர்ந்த சியோமி குழு­மம் இந்­தி­யா­வி­லும் கைப்­பேசி வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் அனு­மதி இன்றி அந்­நி­று­வ­னம் ரூ.5,551 கோடிக்­குச் சம­மான அன்­னி­யச் செலா­வ­ணியை இந்­தி­யா­வுக்கு வெளியே அனுப்­பி­ய­தா­கப் புகார் எழுந்­தது.

இந்த நட­வ­டிக்­கை­யா­னது, அன்­னி­யச் செலா­வணி சட்­டத்தை மீறும் செய­லா­கும். இதை­ய­டுத்து, அம­லாக்­கத்­துறை அந்­நி­று­வ­னத்­தின் மீது நட­வ­டிக்கை எடுத்­தது.

விசா­ர­ணை­யின்­போது காப்­பு­ரிமை தொடர்­பாக இந்­தத் தொகையை சீனா­வுக்கு அனுப்ப வேண்டி இருந்­த­தாக சியோமி நிறு­வ­னம் விளக்­கம் அளித்­தது. ஆனால், அன்­னி­யச் செலா­வணி அனுப்­பு­வ­தற்கு அந்­நி­று­வ­னம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கார­ணங்­களை முன்­வைப்­ப­தாக அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து, சியோமி நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மாக ரூ.5,551 கோடியை அம­லாக்­கத்­துறை பறி­மு­தல் செய்­துள்­ளது.

இந்­தி­யா­வில் அம­லாக்­கத்­துறை­யால் இது­வரை பறி­மு­தல் செய்­யப்­பட்ட ஆக அதி­க­மான தொகை இது­வா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!