ஜெய்சங்கர்: உலகச் சந்தையில் எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்கு அழுத்தம் தரப்பட்டது

அகமதாபாத்: உக்­ரேன், ரஷ்யா இடை­யே­யான போரின் கார­ண­மாக அனைத்­து­ல­கச் சந்­தை­யில் கச்சா எண்­ணெய் வர்த்­த­கம் தொடர்­பாக இந்­தி­யா­வுக்கு அழுத்­தம் தரப்­பட்­ட­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

குஜ­ராத் மாநி­லம் வதோ­தரா நக­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அத்­த­கைய அழுத்­தத்தை எதிர்­கொண்டு மத்­திய அரசு உரிய முடி­வு­களை எடுத்­த­தாகக் குறிப்­பிட்­டார்.

"உக்­ரேன், ரஷ்யா இடையே போர் வெடித்­த­தும் பெட்­ரோல் விலை இரட்­டிப்­பாக அதி­க­ரித்தது. நாம் எங்­கி­ருந்து எண்­ணெய் வாங்க வேண்­டும் என்று அழுத்தம் தரப்பட்­டது.

"ஆனால், நமது நாட்­டுக்கு எது சிறந்­ததோ அதனைச் செய்ய வேண்­டும் என்­பதே பிர­த­மர் மோடி, மத்­திய அர­சின் பார்­வை­யாக இருந்­தது. அழுத்­தம் தரப்­பட்­டால், நாம் அதனை எதிர்­கொள்ள வேண்­டும் என்ற முடிவு எடுக்­கப்­பட்­டது," என்றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.

போர் நடந்துகொண்­டிருந்­த­போது, ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்டின், உக்­ரேன் அதி­பர் ஜெலன்ஸ்கி ஆகிய இரு­வ­ரை­யும் பிர­த­மர் மோடி தொலை­பேசி வழி தொடர்பு கொண்ட­தா­க­வும் இரு தரப்­பி­ன­ரும் சில நாள்­க­ளுக்குப் போர் நிறுத்த ஒப்­பந்­தத்தை மேற்­கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்­தி­ய­தா­க­வும் அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­தார்.

"உக்­ரே­னில் சிக்­கி­யி­ருந்த இந்­திய மாண­வர்­களை பாது­காப்பு­டன் வெளி­யேற்ற வேண்­டும் என பிர­த­மர் மோடி முடிவு செய்­தார். அதற்­கா­கவே போர் நிறுத்­தம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டது.

"இதன் கார­ண­மா­கவே போர் சூழ­லுக்கு மத்­தி­யி­லும் இந்­திய மாண­வர்­கள் தாய் நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­ட­னர்," என்று ஜெய்­சங்­கர் மேலும் கூறி­னார்.

ரஷ்­யா­வி­டம் இருந்து கச்சா எண்­ணெய் பெறு­வ­தற்கு இந்­தியா முடிவு செய்­த­போது அமெ­ரிக்கா உள்­ளிட்ட சில நாடு­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தன. எனி­னும் அந்த எதிர்ப்­பு­களை மீறி இந்­தியா செயல்­பட்­டது. ரஷ்யா தனது இருப்­பில் உள்ள கச்சா எண்­ணெய்யை தள்­ளு­படி விலை­யில் விற்க முன் வந்­ததே இதற்­குக் கார­ணம். இந்­தப் பரி­வர்த்­தனை மூலம் இந்­தி­யா­வுக்கு இது­வரை ரூ.35 ஆயி­ரம் கோடி அள­வுக்கு இழப்பு தவிர்க்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய அரசு அண்­மை­யில் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!