இலவசக் கல்வி: குஜராத்தில் ஆம் ஆத்மி வாக்குறுதி

அக­ம­தா­பாத்: குஜ­ராத்­தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்­தால் கல்­வித்­து­றை­யில் ஆக்­க­பூர்­வ­மான மாற்­றங்­கள் நிக­ழும் என அக்­கட்­சி­யின் தலைமை ஒருங்கி­ணைப்­பா­ள­ரும் டெல்லி முதல்­வ­ரு­மான கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

இந்த ஆண்டு இறு­திக்­குள் தேர்­தல் நடை­பெற உள்­ளதை அடுத்து அர­சி­யல் கட்­சி­கள் பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், ஆம் ஆத்மி ஆட்­சிக்கு வந்­தால் இல­வசக் கல்வி வழங்­கப்­படும் என்று கெஜ்­ரி­வால் வாக்­கு­றுதி அளித்­துள்­ளார்.

குஜ­ராத்­தில் ஏற்­கெ­னவே உள்ள அர­சுப் பள்­ளி­க­ளின் உள்­கட்­ட­மைப்பு மேம்­ப­டுத்­தப்­படும் என்­றும் பல புதிய பள்­ளி­கள் மாநி­லம் முழு­வ­தும் அதிக அள­வில் திறக்­கப்­படும் என்­றும் பொதுக்­கூட்­டம் ஒன்­றில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"குஜ­ராத்­தில் பிறந்த அனை­வருக்­கும் இல­வச, தர­மான கல்வி கிடைக்­கும். யாரை­யும் கட்­டா­யப்­படுத்த மாட்­டோம்.

"பெற்­றோ­ரி­டம் பணம் இருந்­தால் தங்­கள் குழந்­தை­களை தனி­யார் பள்­ளி­களில் சேர்க்­கலாம். ஆனால் அவர்­க­ளி­டம் பணம் இல்­லை­யென்றால், அவர்­க­ளின் குழந்­தை­க­ளுக்கு பணப்பற்­றாக்­குறை­யால் நல்ல கல்வி கிடைக்­கா­மல் இருக்க விட­மாட்­டோம்," என்­றார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.

அனைத்து தனி­யார் பள்­ளி­களும் தணிக்கை செய்­யப்­படும் என்­றும் அப்­பள்­ளி­க­ளின் நிர்­வா­கம் மாண­வர்­க­ளின் பெற்­றோ­ரி­டம் கூடு­தல் கட்­ட­ணம் வசூ­லித்து இருந்­தால் அத்­தொகை திருப்பி அளிக்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

"பெண்­க­ளுக்­கான உயர்­கல்­விக்­கு­ரிய வச­தி­கள் மாநி­லம் முழு­வ­தும் உரு­வாக்­கப்­ப­டு­வ­தை­யும் அரசு உறுதி செய்­யும்.

"ஆட்சிக்கு வந்த கையோடு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்­றார் முதல்வர் கெஜ்­ரி­வால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!