பனிச்சரிவு:10 பேர் பலி; எண்மர் மீட்பு; 11 பேரை மீட்க முயற்சி

உத்தர­கண்ட்: உத்­தர­கண்ட் மாநிலத்­தில் திடீ­ரென பனிச் சரிந்ததில் மலை­யே­றி­கள் 29 பேர் புதைந்து­விட்­ட­னர். அவர்­களில் எட்டு பேர் மீட்­கப்­பட்­டு­விட்­ட­னர். 10 பேர் பலியாயினர். 11 பேரை மீட்­ப­தற்­கான பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து வரு­கின்­றன என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

உத்­தர­கா­சி­யில் இருக்­கும் நேரு மலை­யே­றி­கள் பயி­ல­கத்­தில் பயிற்சி பெற்று வந்த அந்த மலை­யே­றி­கள், திரௌ­பதி தந்தா-2 என்ற குன்­றின் மீது ஏறிக்­கொண்டு இருந்­த­போது திடீ­ரென பனிச் சரிந்து அவர்­களை மூடி­விட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, உத்­தரகண்ட் முதல்­வர் பிஎஸ் தாமி இது பற்றி கூறி­ய­போது, தான் மத்­திய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங்­கி­டம் உட­ன­டி­யாக பேசி ராணு­வத்­தின் உத­வியை நாடி­ய­தா­கத் தெரி­வித்­தார்.

மத்­திய அர­சாங்­கம் தன்­னால் ஆன அனைத்து உத­வி­க­ளை­யும் செய்­யும் என்று திரு ராஜ்­நாத் சிங் உறுதி கூறி­ய­தா­க­வும் சிக்­கிக்கொண்ட ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் மீட்க முழு­மூச்­சில் பணி­கள் இடம்­பெ­று­வ­தா­க­வும் முதல்­வர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இது­பற்றி கருத்து கூறிய அமைச்­சர் ராஜ்­நாத் சிங், மீட்­புப் பணி­யில் உத­வும்படி இந்­திய விமா­னப் படைக்கு தான் உத்­த­ர­விட்டு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!