பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து: 32 பேர் பலி

திருமணத்துக்குச் சென்றபோது உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சோகம்

இடா­ந­கர்: பள்­ளத்­தாக்­கில் விழுந்து பேருந்து கவிழ்ந்த விபத்­தில் 32 பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் உத்­த­ரா­கண்ட் மாநி­லத்­தில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஒரு திரு­மண நிகழ்­வில் பங்­கேற்­கச் சென்­ற­போது இந்­தத் துய­ரச் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

உத்­த­ரா­காண்ட் மாநி­லத்­தின் லால்­தாங் பகு­தி­யில் இருந்து பவுரி மாவட்­டத்­தில் உள்ள பிரோன்­கால் என்ற இடத்­துக்கு அந்­தப் பேருந்து சென்றுகொண்­டி­ருந்­தது. திரு­ம­ணத்­தில் கலந்துகொள்­ளும் ஆர்­வத்­து­டன் ஐம்­ப­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பேருந்­தில் பய­ணம் மேற்­கொண்­ட­னர்.

இரவு சுமார் 7.30 மணி­ய­ள­வில் மலைப்­பாங்­கான பகு­தியை அடைந்த பேருந்து, அங்­குள்ள சம்ரி என்ற இடத்­தில் உள்ள சாலை வளை­வில் திரும்ப முற்­பட்­ட­போது திடீ­ரென ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்­தது. அதை­ய­டுத்து அந்­தப் பேருந்து தாறு­மா­றாக ஓடி, அங்­கி­ருந்த பள்­ளத்­தாக்­கில் விழுந்து கவிழ்ந்­தது.

விபத்­தில் சிக்­கி­ய­வர்­களில் சிலர் உதவி கேட்டு கூக்­கு­ரல் எழுப்­பி­னர். இதை­ய­டுத்து அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த பொது­மக்­கள் விரைந்து வந்து மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர். சில நிமி­டங்­களில் தீய­ணைப்பு வீரர்­களும் வந்து சேர்ந்­த­னர்.

இந்­தக் கோர விபத்­தில் 32 பேர் பலி­யா­கி­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இது நேற்று மாலை நில­வ­ர­மா­கும்.

காய­ம­டைந்­த­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். முன்­ன­தாக, பள்­ளத்­தாக்­கில் விழுந்து உயி­ருக்­குப் போரா­டிய 21 பேரை மீட்­புக் குழு­வி­னர் மீட்­ட­னர்.

விபத்­தில் உயி­ரி­ழந்­தோர் குடும்­பங்­க­ளுக்கு மாநில முதல்­வர், பிர­த­மர் மோடி உள்­ளிட்ட தலை­வர்­கள் இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!