முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்

புது­டெல்லி: சமாஜ்­வாதி கட்­சி­யின் நிறு­வ­னத் தலை­வர் முலா­யம் சிங் யாத­வின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரம் தெரி­வித்­துள்­ளது. 82 வயது முலா­யம் சிங் யாதவ் (படம்), கடந்த மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லி, குரு­கி­ரா­மில் உள்ள வேதாந்தா மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

கடந்த திங்­கள்கிழமை வரை கண்காணிப்புப் பராமரிப்புப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்த முலா­யம் சிங் யாதவ், பின்­னர் தீவிர சிகிச்­சைப் பகு­திக்கு மாற்­றப்­பட்­டார். அங்கு அவ­ருக்கு உயிர் காக்­கும் மருந்­து­க­ளைக் கொண்டு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக மருத்­து­வ­மனை தெரி­வித்­துள்­ளது.

நிபு­ணத்­து­வம் பெற்ற மருத்­து­வக் குழு முலா­யம் சிங் யாத­வுக்கு சிகிச்சை அளித்து வரு­கிறது. அவர் தொடர்ந்து மருத்­து­வர்­க­ளின் கண்­கா­ணிப்­பில் இருந்­து­வ­ரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஹரி­யானா முதல்­வர் மனோ­கர் லால் கத்­தார் மேதாந்தா மருத்­து­வ­மனைக்கு ேநற்று நேரில் முலா­யம் சிங் யாத­வின் நிலை பற்றி அறிந்­து­வந்­தார்.

அப்­போது, முலா­யம் சிங் யாத­வின் குடும்­பத்­தி­ன­ரை­யும், மகன் அகி­லேஷ் யாத­வை­யும் சந்­தித்து, முாலயம் சிங் யாதவ் விரை­வில் குண­ம­டைய வாழ்த்து தெரி­வித்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

மேலும், முலா­யம் சிங் யாத­வின் உடல்­நி­லை­யில் சிறிது முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் எனி­னும் முழு­மை­யாக குண­ம­டைய காலம் ஆகும் என்­றும் மருத்­து­வர்­கள் கூறி­ய­தாக மனோ­கர் லால் கத்­தார் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!