கால்முறிவுக்கு அட்டைபலகை கட்டு: மருத்துவமனையில் நடந்த அவலம்  

கால்முறிவுக்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு வழக்கமான கட்டுக்குப் பதிலாக அட்டைபலகை கொண்டு கட்டுப்போடப்பட்டது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அரசாங்க மருத்துவமனை ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

எலும்பு முறிவுகளுக்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் கட்டுப் போடாமல், பொருள்களை வைக்கும் அட்டைபலகையால் கட்டு போட்டுள்ளனர் மருத்துவர்கள். பிளாஸ்டர் கட்டு இல்லாததால் இவ்வாறு செய்யப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என அம்மாநில சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

சாலை லிபத்தில் காயமடைந்த இரு ஆடவர்கள் அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டனர். ஒருவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவருக்கு அட்டையால் கட்டுப்போட்டனர். பின்னர், அவர் வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அட்டைப்பலகை கட்டைப் பார்த்த அந்த மருத்துவமனை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச அரசாங்க மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது இது முதல்முறை அல்ல. ஒரு மாதத்துக்கு முன், தலையில் காயம் ஏற்பட்ட பெண் ஒருவருக்கு ஆணுறை வைக்கும் பொட்டலத்தைக் கொண்டு கட்டுப்போடப்பட்டது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!