தேர்தல்: 144 தொகுதிகளைக் குறிவைக்கும் பாரதிய ஜனதா

மூன்றாவது அணிக்காக சிறப்பு விமானத்தில் பறக்கப்போகும் சந்திரசேகர ராவ்

புது­டெல்லி: கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது பாஜக தோல்வி கண்ட 144 தொகு­தி­களை குறி­வைத்து அக்­கட்சி நாற்­பது பேர­ணி­களை நடத்த உள்­ளது. அவற்­றில் பிர­த­மர் மோடி பங்­கேற்­பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, பாஜ­க­வுக்கு எதி­ராக மூன்­றா­வது அணியை உரு­வாக்க முயற்சி மேற்­கொண்­டுள்ள தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ், இதற்­காக நாடு முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்ள இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற மக்­க­ள­வைத் தேர்­த­லில் பாஜக தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­டணி, மொத்­த­முள்ள 542 தொகு­தி­களில் 352 இடங்­களில் வெற்றி பெற்­றது.

அவற்­றுள் பாஜக மட்­டுமே 303 தொகு­தி­களில் வெற்றி வாகை சூடி­யது. தோல்வி கண்ட மற்ற தொகு­தி­கள் பல­வற்­றி­லும்­கூட குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி வாய்ப்பை இழந்­தது.

இதை­ய­டுத்து கைந­ழு­விப்­போன அந்­தத் தொகு­தி­களில் தீவிர கவ­னம் செலுத்த கட்சி நிர்­வா­கி­க­ளுக்கு பாஜக தலைமை உத்­த­ர­விட்­டுள்­ளது. இதை­ய­டுத்து 144 நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களில் உள்ள வாக்­கா­ளர்­க­ளைக் கவ­ரும் வித­மாக அடுத்து வரக்­கூ­டிய மாதங்­களில் நாற்­பது பேர­ணி­களை நடத்த பாஜ­க­வி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­னர். இது தவிர, மேலும் 104 தொகு­தி­களில் பாஜக தலை­வர் ஜேபி.நட்டா, மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் ஆகி­யோர் பேர­ணி­களை நடத்த உள்­ள­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்­நி­லை­யில், பாஜக தோல்வி கண்ட தொகு­தி­களில் நடை­பெறும் பேரணி­களில் மட்­டும் பிர­த­மர் மோடி பங்­கேற்க இருப்­ப­தா­க­வும் அதற்­கான பிரம்­மாண்ட ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அக்­கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, மோடிக்கு எதி­ராக தேசிய அர­சி­ய­லில் கால்­ப­திக்க உள்­ளார் தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ். காங்­கி­ரஸ் கட்சி இடம்­பெ­றாத வகை­யில் எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணியை அமைக்க வேண்­டும் என்­பது சந்­தி­ர­சே­கர ராவின் விருப்­பம்.

அதற்­காக அவர் பல்­வேறு மாநி­லங்­க­ளுக்­குச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு, எதிர்க்­கட்­சித் தலைவர்­க­ளின் ஆத­ர­வைத் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் இதற்­காக நூறு கோடி ரூபாய் செல­வில் அவர் சிறப்பு விமா­னம் ஒன்றை வாங்க இருப்­ப­தா­க­வும் ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது. அவர் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!