உக்ரேன் போரின் பின்விளைவுகள் குறித்து இந்தியா, ஆஸ்திரேலியா பேச்சு

புது­டெல்லி: உக்­ரேன் போரால் இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் ஏற்படப் போகும் பின்­வி­ளை­வு­கள் குறித்து இந்­தி­யா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் விரி­வான அள­வில் ஆலோ­சனை நடத்­தி­ய­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்ளா்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்ள அவர், 'குவாட்' அமைப்­பின் முன்­னேற்­றம், ஜி 20 விவ­கா­ரங்­கள் குறித்­தும் விவா­திக்­கப்­பட்­ட­தாக செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது குறிப்­பிட்­டார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இரண்­டா­வது முறை­யாக அதி­கா­ர­பூர்வ பய­ணம் மேற்­கொண்­டுள்ள அமைச்­சர் ஜெய்­சங்­க­ருக்கு அங்கு சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. அதன் பின்­னர் அந்­நாட்டு வெளியுறவு அமைச்­சர் பெனி வோங்கை சந்தித்து ஆலோ­சனை மேற்­கொண்­டார் ஜெய்­சங்­கர்.

"அனைத்­து­லக அணு ஆற்­றல் கழ­கம், பரு­வ­கால நிதிக்­கான, எட்டக்­கூ­டிய வளர்ச்­சி இலக்­கு­கள் ஆகி­ய­வற்றை பற்­றி­யும் ஆலோ­சனை­கள் நடத்­தப்­பட்­டன.

"இந்­தச் சந்­திப்­பில் இந்­தியா, ஆஸ்­தி­ரே­லி­யாவை சிறந்த பகு­தி­க­ளாக எப்­படி வடி­வ­மைப்­பது என்­பது குறித்­தும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னோம்.

"பொரு­ளி­யல், வர்த்­த­கம், கல்வி, ராணு­வம், பாது­காப்பு, தூய எரி­சக்தி உள்­ளிட்ட பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து பேச முடிந்­தது," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.

முன்னதாக நியூசிலாந்து சென்ற அவர், வெலிங்டன் நகரில் புதிய இந்திய தூதரக அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர், அங்கு வந்திருந்த இந்திய வம்சாவளியினரிடையே உரையாடிய அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகம், மின்னணு, வேளாண்மை, பாரம்பரிய மருத்துவம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-நியூசிலாந்து இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!