வானூர்தி மூலமாக வெடிபொருள்கள் கடத்தல்

சண்­டி­கர்: ஆளில்லா சிறிய ரக விமா­னங்­கள் மூலம் பாகிஸ்­தா­னில் இருந்து இந்­தி­யா­வுக்­குள் வெடி­பொ­ருள்­கள் கடத்தி வரப்­ப­டு­வதை பஞ்­சாப் காவல்­துறை கண்­டு­பி­டித்­துள்­ளது.

இதில் பாகிஸ்­தான் உளவு அமைப்­பான ஐஎஸ்­ஐக்கு தொடர்பு இருப்­ப­தா­க­வும் பஞ்­சாப் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

வெடி­பொ­ருள் கடத்­த­லில் ஐஎஸ்ஐ உள­வா­ளி­யான ஆசிப் டோங்­கர் என்­ப­வ­ருக்கு தொடர்பு இருப்­ப­தா­க­வும் அவர் கராச்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் பஞ்­சாப் காவல்­துறை அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

கடந்த காலத்­தில் இவ­ரது ஏற்­பாட்­டின் மூலம் நாற்­பது முறை ஆளில்லா விமா­னங்­கள் இந்­தி­யா­வுக்­குள் வெடி­பொ­ருள்­களை கொண்டு வந்­துள்­ளன.

போதைப்­பொ­ருள் கடத்­தல் வழக்கில் சிக்கி பஞ்­சா­பின் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள ஜாஸ்­கரன் சிங்கி என்­ப­வ­ரி­டம் நடத்­திய விசா­ர­ணை­யின் போதே இந்­தி­யா­வுக்­குள் வெடி­பொ­ருள்­கள் கடத்தி வரப்­படுவது தெரியவந்­தது.

இது தொடர்­பாக அவ­ரது கூட்­டா­ளி­கள் நான்கு பேர் பஞ்­சாப் காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!