சீரமைப்புப் பணியில் மோசடி

தொங்கு பால விபத்து; குஜராத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தில் நிகழ்ந்த தொங்கு பால விபத்­தில் 141 பேர் கொல்­லப்­பட்­டுள்ள நிலை­யில் அந்­தப் பாலத்தை சீர­மைத்து விட்­ட­தாக ஒப்­பந்­த­தா­ரர் ஏமாற்­றி­யது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

தொங்­கு பாலத்­தைத் தாங்கிப் பிடிக்­கும் கேபிள்­களை மாற்­றா­மல் வர்­ணம் பூசி புதுப்­பிக்­கப்­பட்­ட­தைப் போல ஒப்­பந்­த­தா­ரர் காட்­டி­யி­ருப் பதா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் 30ஆம் தேதி ஞாயிற்­றுக்கிழமை மோர்பி மாவட்­டத்­தில் 150 பேர் தாங்­கக்­கூ­டிய பாலத்­தில் ஒரே நேரத்­தில் 400 பேர் இருந்­த­தால் பாலம் அறுந்து விழுந்­தது. 141 பேர் தண்­ணீ­ரில் மூழ்கி இறந்­து­விட்­ட­னர். நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­ட­னர். இந்த தொங்­கு பாலத்தை சீர­மைக்­கும் பணியை மேற்­கொண்ட ஒப்­பந்­த­தா­ரர், அதனை சரி­வர செய்­யா­மல் ஏமாற்­றிய விவ­ரம் தற்­போது தெரிய வந்­துள்­ளது.

இந்­தப்­பா­லம் 1879ல் ஆங்­கி­லே­யர் ஆட்­சிக் காலத்­தில் கட்­டப்­பட்­டது. சுமார் 230 மீட்­டர் நீளம் கொண்ட இந்­தப் பாலம் சிறந்த சுற்­று­லாத் தள­மாக இருந்து வரு­கிறது. 143 ஆண்­டு­கள் பழ­மை­யான பாலம் என்­ப­தால் அதனை சீர­மைக்க முடிவு செய்­யப்­பட்டு அதற்­கான பணியை மேற்­கொள்ள கடந்த ஆறு மாதத்­திற்கு முன்பு 'ஓரேவா' என்ற தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் ஒப் படைக்­கப்­பட்­டது.

இந்­தப் பணியை முடிக்க வரு­கிற டிசம்­பர் மாதம் வரை அந்­நிறு வனம் அவ­கா­சம் கேட்டு இருந்­தது. ஆனால் அடுத்­த­டுத்து தீபா­வளி மற்­றும் குஜ­ராத் புத்­தாண்டை யொட்டி அதற்கு முன்­பாக பணியை முடிக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்ட தாகத் தெரி­கிறது. இத­னால் அவ­ச­ர ­க­தி­யில் இந்த பணி நடந்து கடந்த 26ஆம் தேதி மீண்­டும் பொது­மக்­கள் பயன்­பாட்­டிற்­காக திறக்­கப்­பட்­டது.

மேலும் தனி­யார் நிறு­வ­னத்­தின் ஒப்­பந்­த­தா­ரர் தொங்­கு பாலத்தை தாங்கிப் பிடிக்­கும் கேபிள்­களை மாற்­றா­மல் வர்­ணம் மட்­டும் பூசி புதுப்­பிக்­கப்­பட்­டது போல காட்­டி­யி­ருக்­கி­றார். இது தொடர்­பாக விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

இந்த நிலை­யில் பிர­த­மர் மோடி செவ்­வாய்க்கிழமை அன்று சம்­ப­வம் நடந்த இடத்தில் தொங்கு பாலத்தை நேரில் பார்­வை­யிட்­டார்.

விபத்து தொடர்­பாக அவர் அதி­கா­ரி­க­ளி­டம் விவ­ரங்­களைக் கேட்­ ட­றிந்­தார்.

பின்­னர் காயம் அடைந்து மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­களைப் பார்த்து அவர் ஆறு­தல் கூறி­னார்.

பின்­னர் பேசிய பிர­த­மர் பிர­த­மர் மோடி, விபத்­துக்­கான கார­ணம் கண்­ட­றி­யப்­பட்­டால்­தான் எதிர்­ காலத்­தில் இது­போன்ற சம்­ப­வம் ஏற் ­ப­டு­வதை தடுக்க முடி­யும். இது குறித்து விசா­ரணை நடத்த உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது என்­றார்.

இதற்­கி­டையே குஜ­ராத் மாநி­லம் முழு­வ­தும் நேற்று துக்க நாளாக அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!