சிறுவன் கடித்து பாம்பு பலி

ஜாஷ்­பூர்: தன்­னைக் கடித்த நாகப்­பாம்பை சிறு­வன் கடித்­த­தால் அந்­தப் பாம்பு இறந்­தது. சிறு­வன் உயிர் தப்­பி­னான்.

இந்த விநோ­தச் சம்­ப­வம் சத்­தீஸ்­கர் மாநி­லம் ராய்ப்­பூ­ருக்கு வட­கி­ழக்கே 350 கி.மீ தொலை­வில் உள்ள ஜாஷ்­பூர் மலை­வாழ் பகு­தி­யில் நடந்­தது.

கடந்த திங்­கட்­கி­ழமை அன்று ஜாஷ்­பூர் மாவட்­டம் பந்­தர்­பாத் கிரா­மத்­தில் தீபக் என்ற 12 வயது சிறு­வன், வீட்­டின் பின்­பு­றத்­தில் விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தான். அப்போது நாகப்­பாம்பு ஒன்று அவ­னைக் கடித்­துள்­ளது. சிறு­வனும் தனது கையில் சுற்­றிக்­கொண்டு இருந்த அந்த பாம்பை கடித்­துள்­ளான். இத­னால் அந்த பாம்பு இறந்­தது. அங்கு வந்த அவ­னது குடும்­பத்­தி­னர் சிறு­வனை அருகில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யத்­திற்கு அழைத்­துச் சென்று சேர்த்­த­னர். மருத்­து­வர்­கள், உட­ன­டி­யாக சிறு­வ­னுக்கு பாம்பு விஷ முறிவு ஊசி போட்டு சிகிச்சை அளித்தனர். பின்­னர் சிறு­வன் வீட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டான் என்று மருத்­துவ அதி­காரி டாக்­டர் ஜெம்ஸ் மின்ஜ் தெரி­வித்­தார்.

பாம்பு கடித்­தது பற்றி பேசிய சிறு­வன் தீபக், "பாம்பு கடித்­த­தால் மிகுந்த வலி எடுத்­தது. அந்த பாம்பை வளைத்து கையில் சுற்றிக் கொண்டு இரண்டு முறை நானும் கடித்­தேன்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!