பிரியங்கா காந்தி: காங்கிரஸ் வென்றால் மாதந்தோறும் நிதியுதவி

சிம்லா: இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி தந்துள்ளார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இமாசலப் பிரதேசத்தில் இம்மாதம் 12ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார்.

"இமாசலப் பிரதேசத்தில் பாஜக அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 100,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். முதலாவது சட்டமன்றக் கூட்டத்திலேயே இம்முடிவு உறுதி செய்யப்படும். வீட்டிலும் வெளியிலும் வேலை செய்து பெண்கள் படும் சுமையை அறிவோம். எனவே, எல்லாப் பெண்களுக்கும் மாதத்துக்கு ரூ.1,500 நிதியுதவி அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவதையும் சட்டமன்றக் கூட்டத்திலேயே உறுதி செய்வோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த பணம் இல்லை என்று பாஜக சொல்கிறது.

"பெரிய நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ய பணம் இருக்கிறது. அரசு ஊழியர் ஓய்வூதியத்துக்கு மட்டும் பணம் இல்லையா? எனவே, இவற்றையெல்லாம் ஆராய்ந்து, காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்," என்று பிரயங்கா காந்தி பிரசாரம் செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!