32 லட்சம் திருமணங்கள் மூலம் ரூ.3.75 லட்சம் கோடி வர்த்தகம்

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் இம்­மா­தம் 14 முதல் டிசம்­பர் 14ஆம் தேதி வரை திரு­மண வைப­வங்­கள் நடை­பெ­றும் காலக்­கட்­டம் என்­ப­தால் 32 லட்­சம் திரு­ம­ணங்­கள் நடக்க உள்­ள­தா­க­வும் இதன்­மூ­லம் ரூ.3.75 லட்­சம் கோடி ரூபாய்க்கு வர்த்­த­கம் நடக்­கும் என்­றும் அகில இந்­திய வர்த்­த­கர்­கள் சங்கக் கூட்­ட­மைப்பு (சிஏ­ஐடி) கூறியுள்­ளது.

திரு­ம­ணத்­திற்­காக வாங்­கப்­படும் பல­த­ரப்­பட்ட பொருள்­கள் மூலம் வர்த்­த­கம் களை­கட்­டும் என்­றும் கணித்­துள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் உள்ள 35 முக்­கிய நக­ரங்­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வில், ஐந்து லட்­சம் திரு­ம­ணங்­கள் தலா ரூ.3 லட்­சம் செல­வி­லும் 10 லட்­சம் திரு­ம­ணங்­கள் ரூ.10 லட்­சம் செல­வி­லும் 5 லட்­சம் திரு­மணங்­கள் ரூ. 25 லட்­சம் செல­வி­லும் 50,000 திரு­ம­ணங்­கள் ரூ. 50 லட்­சம் செல­வி­லும் 50 திரு­ம­ணங்­கள் ஒரு கோடி ரூபாய் செல­வி­லும் நடத்­தப்­ப­ட­லாம் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் திரு­ம­ணங்­க­ளுக்­குத் தேவை­யான நகை­கள், புட­வை­கள், கால­ணி­கள், அழைப்பிதழ்கள், பூக்­கள், பழங்­கள், இனிப்­பு­கள் உள் ளிட்ட பொருள்­களை வாங்குவதன் மூலம் ரூ.3.75 லட்­சம் கோடிக்கு வர்த்­த­கம் நடக்­கும் என்­றும் இத­னால் ஏரா­ள­மா­ன­வர்­கள் பய­ன­டை­வர் என்­றும் ஆய்வு கூறி­யுள்­ளது.

தலை­ந­கர் டெல்­லி­யில் மட்­டும் 3.5 லட்­சம் திரு­ம­ணங்­கள் நடக்க லாம் என்­றும் இதன்­மூ­லம் ரூ.75,000 கோடி சந்­தை­யில் புரள உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

கடந்­தாண்டு இதே கால­கட்­டத் தில் 25 லட்­சம் திரு­ம­ணங்­கள் நடந்­தன. இவற்­றின்­மூ­லம் மூன்று லட்­சம்கோடி ரூபாய்க்கு வர்த்­த­கம் நடந்­த­தாக சிஏ­ஐடி தெரி­வித்­து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!