திருமண காலகட்டத்தில் தங்கக் கடத்தல் அதிகரிப்பு

புது­டெல்லி: கொரோனா பெருந்­தொற்று கார­ண­மாக உல­கெங்­கி­லும் கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்­தப்­பட்­டி­ருந்த விமா­னப் பய­ணங்­கள் இப்­போது முழுவீச்சில் வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த சில மாதங்­களாகவே இந்­தி­ யா­வுக்குள் கடத்தப்படும் தங்­கத்தின் அளவும் கடு­மை­யாக உயர்ந்­து வருகிறது.

திரு­ம­ணக் காலத்தை முன்­னிட்டு இந்­தி­யா­வுக்கான தங்கத் தேவை ஆண்டுக்கு 50 விழுக்­காடாக உள்ளதாக உல­கத் தங்க மன்­றம் சுட்டிக்காட்டி உள்ளதை அடுத்து, "உலோ­கத்­தின் தேவை அதி­க­ரிப்­பால் தங்கக் கடத்­தல் அதிகரித்து வரு­கிறது," என வரு­வாய்ப் புல­னாய்வு, சுங்­கத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்ளன.

கடந்த அக்­டோ­பர் மாதத்­தில் கைப்­பற்­றப்­பட்ட தங்கத்தின் பெரும்­பகுதி ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சில் இருந்தும் செப்­டம்­பர் மாதத்­தில் வட­கி­ழக்கு மாநி­லங்­களில் இருந்­தும் பறி­மு­தல் செய்­யப்பட்டுள்ளது.

இந்­தக் கடத்தலில் மிகப்­பெ­ரிய அளவில் செப்­டம்­பர் மாதத்­தில் 11 முறையாக மொத்­தம் 121 கிலோ தங்­கம் கைப்­பற்­றப்­பட்­டதாக 'த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத் தக வல் குறிப்பிட்டுள்ளது.

பங்ளாதேஷ், மியன்மாரின் வட­கி­ழக்கு எல்­லை­கள் வழி­யாகவும் இந்த உலோ­கம் கடத்­தப்­பட்டதாக வும் கூறப்படுகிறது.

கடத்­தல்­கா­ரர்­களின் அனைத்து முயற்­சி­க­ளை­யும் முறி­ய­டிக்க தீவிரமாகக் கண்­கா­ணிக்கப்பட்டு வரு­வ­தா­க­வும் அத­னை­யும் மீறி புத்­தி­சா­லித்­த­ன­மாக கடத்­தல் பணி­களில் கடத்­தல்­காரர்­கள் ஈடு­ப­டு­வதா­க­வும் வரு­வாய்ப் புல­னாய்வு அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

தங்­கம் பறி­மு­தல்

 கடந்த செப்­டம்­பர் மாதத்தில் 121 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. பங்ளாதேஷ், மியன்மா­ரின் வட­கி­ழக்கு எல்­லை­கள் வழி­யாக 11 முறை இந்த உலோ­கம் கடத்­தப்­பட்­ட­தாக வருவாய்ப் புல னாய்வு இயக்குநரகம் கூறி­யுள்­ளது.

 அக்­டோ­பர் மாதத்தில் ரூ.5 கோடி 20 லட்­சம் மதிப்­பி­லான 9.895 கிலோ தங்­கத்தை இடை­வார், முதுகுப் பைகளின் ரகசிய அறை களில் ஒளித்துவைத்து கடத்தி ­வந்தனர்.

 மற்­றொரு சம்பவத்தில், ஷார்­ஜா­வி­லி­ருந்து வந்த கடத்­தல்­கா­ரர் 1.875 கிலோ தங்­கத் தூளை பொட்ட லங்­களில் மறைத்து கடத்தி வந்தார்.

 ஐக்­கிய அரபு சிற்றரசில் இருந்து வந்த கொல்­லத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் காலணிகளில் தங்­கக் கம்பிகளை ஒட்டி வைத்துக் கொண்டு வந்­ததை கொச்சி விமான நிலைய அதி­கா­ரி­கள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர்.

 துபா­யில் இருந்து வந்த பாலக்­காட்டைச் சேர்ந்த மற்­றொ­ரு­ பயணி தனது 'பேண்ட் ஜிப்'­பில் பொருத்தி தங்­கத்தைக் கடத்­தி­ வந்ததை அடுத்து அவர் கைது செய்­யப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!