15 சிறுமியரைச் சீரழித்த மடாதிபதியின் லீலைகள்

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த மடா­தி­பதி ஒரு­வர் 15 சிறுமி­களை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக புகார் எழுந்­துள்­ளது. சிவ­மூர்த்தி முருகா சர­ணரு சுவாமி என்று குறிப்­பி­டப்­படும் அவ­ரி­டம் தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக அம்­மா­நில காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

64 வய­தான இச்­சா­மி­யார், மடத்­தின் நிர்­வா­கம் நடத்தி வரும் பள்­ளி­யில் படித்­து­வ­ரும் மாண­வி­க­ளைச் சீர­ழித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மடா­தி­பதி சிவ­மூர்த்தி இரண்டு மாண­வி­களை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கடந்த ஆகஸ்ட் மாதம் சித்­ர­துர்கா பகுதி காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, மடா­தி­பதி உள்­ளிட்ட ஐந்து பேர் மீது வழக்­குப் பதிவு செய்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வந்­த­னர். அதன் அடிப்­ப­டை­யில் கடந்த செப்­டம்­பர் முதல் தேதி­யன்று சாமி­யார் சிவ­மூர்த்தி முருகா கைது செய்­யப்­பட்­டார். மேலும் மடத்­தின் ஊழி­யர்­கள் மூவ­ரும் வழக்­க­றி­ஞர் ஒரு­வ­ரும் உரிய விசா­ர­ணைக்­குப் பிறகு கைது செய்­யப்­பட்­ட­தாக காவல்­துறை அறி­வித்­தது.

இத்­த­க­வல் வெளி­யா­னதை அடுத்து சாமி­யார் சிவ­மூர்த்தி முரு­கா­வின் பாலி­யல் தொல்­லை­கள் குறித்து மேலும் சில மாண­வி­கள் புகார் அளித்­ததை அடுத்து, இவ்­வழக்கு சூடு­பி­டித்­தது.

ஆதா­ரங்­க­ளைத் திரட்­டு­வ­தற்­காக அப்­ப­குதி காவல்­துறை துணை கண்­கா­ணிப்­பா­ளர் அனில் தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட தனிப்­படை மடத்­துக்­குச் சென்று சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­து. அப்­போது மடத்­தின் ஊழி­யர்­கள் பலர் விசா­ரிக்­கப்­பட்­ட­னர். அப்­போது பல்­வேறு திடுக்­கி­டும் தக­வல்­கள் தெரி­ய­வந்­த­தாக காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

"மடா­தி­பதி சிவ­மூர்த்தி முருகா சர­ணரு, சிறு­மி­க­ளுக்கு மயக்க மருந்து செலுத்­தப்­பட்ட ஆப்­பிளை கொடுத்து அவர்­களை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­துள்­ளார். மேலும் ஒரு சிறு­மியை அவர் கொலை­யும் செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"மடத்­தின் நிர்­வா­கத்­தில் உள்ள விடு­தி­யின் கண்­கா­ணிப்­பா­ளர், மடத்­தின் செய­லா­ளர் உள்­ளிட்­டோர் சாமி­யா­ருக்கு உத­வி­யுள்­ள­னர்," என்று விசா­ர­ணை­யின்­போது ஊழி­யர்­கள் கூறி­ய­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மடா­தி­பதி சிவ­மூர்த்தி முரு­கா­வால் சீர­ழிக்­கப்­பட்ட சிறு­மி­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பில் ஊட­கங்­களில் மாறு­பட்ட தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன. பாதிக்­கப்­பட்ட சிறு­மி­கள் அனை­வ­ரும் மடத்­தின் அலு­வ­ல­கம், சாமி­யா­ரின் படுக்­கை­யறை, கழி­வ­றை­யில் வைத்து பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­படுத்­தப்­பட்­ட­தாக, காவல்­து­றை­யின் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"இரவு எட்டு மணிக்­கு மேல் தனது படுக்கை அறைக்கு மாண­வி­களை வர­வ­ழைத்­துள்­ளார். அவர் தகாத முறை­யில் நடந்­து­கொள்­வ­தற்கு சிறு­மி­கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். எனவே அவர்­க­ளுக்கு மயக்க மருந்து கலந்த ஆப்­பிள்­க­ளைக் கொடுத்­துள்­ள­னர்.

"இதுகுறித்து வெளியே ஏதும் சொல்­லக்­கூ­டாது என மாண­வி­கள் மிரட்­டப்­பட்­டுள்­ள­னர். மேலும் தமது சாபம், சிறு­மி­க­ளை­யும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரை­யும் அழித்­து­வி­டும் என்று கூறி­யும் சாமி­யார் மிரட்டி உள்­ளார். இத­னால் சிறு­மி­கள் தங்­க­ளுக்கு நடந்த கொடு­மை­களை வெளியே சொல்­ல­வில்லை," என்று காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பதி­னைந்­துக்­கும் மேற்­பட்ட சிறு­மி­கள் சீர­ழிக்­கப்­பட்­ட­தா­கப் புகார் எழுந்­துள்ள போதி­லும், குற்­றச்­சாட்டு­களை நிரூ­பிக்­கத் தேவைப்­படும் அறி­வி­யல்­பூர்வ சான்­று­கள் எது­வும் இது­வரை கிடைக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

மடாலயப் படுக்கையறை.. இரவு 8 மணி... பள்ளிச்சிறுமி... மயக்கும் ஆப்பிள்...

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!