‘விமான பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை’

புது­டெல்லி: விமா­னத்­தில் பய­ணம் செய்­யும் பய­ணி­கள் இனி முகக் ­க­வ­சம் அணிய வேண்­டி­ய­தில்லை என்று இந்­திய சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது. கொரோனா தொற்று கார­ண­மாக முகக்­க­வ­சம் கட்­டா­யம் அணிய வேண்­டும் என்ற கட்­டுப்­பாடு நடப்­பில் இருந்து வந்­தது.

இந்­தக் கட்­டுப்­பாடு தற்­போது ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து விமான பய­ணி­கள் விமானங்களில் முக­க­வ­சம் இல்­லா­மல் பய­ணம் செய்­ய­லாம்.

இது தொடர்­பான தக­வலை விமான நிறு­வ­னங்­க­ளுக்கு சிவில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து அமைச்சு அனுப்பி வைத்­துள்­ளது.

கொரோனா கிருமி பெருந்­தொற்று மேலாண்மை தொடர்­பான அர­சின் கொள்­கைக்கு ஏற்ப இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் தொற்று குறைந்துள்ள போதிலும் முகக்­க­வ­சம் அணி­வது தொற்­றி­லி­ருந்து பாது­காக்க உத­வும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முகக்கவசம் அணிவது விமானப் பயணிகளின் விருப்ப மாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!