தேக்கு மரம் கடத்திய கும்பலை துரத்திப் பிடித்ததால் கோபம்: கிராம மக்கள், வனத்துறையினர் மோதலில் ஆறு பேர் பலி

கௌஹாத்தி: அசாம், மேகா­லயா மாநி­லங்­க­ளின் எல்­லைப் பகுதியில் நிகழ்ந்த துப்­பாக்­கிச்­சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் பலி­யாகி உள்­ள­னர். இத­னால் எல்­லைப் பகுதி­யில் பதற்­றம் நிலவி வரு­கிறது.

இறந்­த­வர்­களில் ஐந்து பேர் மேகா­ல­யா­வைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் மற்­றொ­ரு­வர் அசாம் வனத்­துறை அதி­காரி என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் அசாம் வனப்­பகு­தி­யில் இருந்து ஒரு லாரியில் தேக்கு மரங்­கள் கடத்­திச் செல்லப்­படு­வதை அறிந்த வனத்­து­றை­யினர், அந்த லாரி­யைத் துரத்­திப் பிடித்­த­னர். அதற்­குள் அந்த லாரி மேகா­லயா எல்­லைக்­குள் நுழைந்து­விட்­டது.

பின்­னர் தேக்கு மரங்­களைப் பறி­மு­தல் செய்ய வனத்­து­றை­யினர் முயன்­ற­போது, அந்த லாரி மடக்­கிப் பிடிக்­கப்­பட்ட கிரா­மத்­தைச் சேர்ந்த மக்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்தனர்.

அப்­போது கிராம மக்­கள் தாக்கு­தல் நடத்­தி­ய­தில் வனத்­துறை அதி­காரி உயி­ரி­ழந்­த­தா­க­வும் வனத்­துறை­யி­னர் தற்­காப்­புக்­கா­கச் சுட்­ட­தில் மேகா­லயா கிராம மக்­கள் ஐவர் இறந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் இரு மாநி­லங்­கள் இடையே பதற்­றம் ஏற்­பட்டு உள்­ளது. முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை­யாக மேகா­ல­யா­வின் ஏழு மாவட்­டங்­களில் நேற்று காலை முதல் இணை­ய­த்தளச் சேவை முடக்­கப்­பட்டு உள்­ள­தாக அம்­மா­நில அரசு தெரி­வித்து உள்­ளது.

கிராம மக்­கள் ஐந்து பேர் உயிரிழந்­ததை மேகா­லயா முதல்­வர் உறுதி செய்­துள்­ளார். கிராம மக்கள்­தான் முத­லில் தாக்­கி­யதாக­வும் இது துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­ப­வம் என்­றும் அசாம் முதல்­வர் தெரி­வித்­துள்­ளார்.

டுவிட்­டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊட­கங்­கள் தவ­றான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­பட வாய்ப்பு­உள்­ள­தால், முன்­னெச்­ச­ரிக்கை நடவடிக்கை­யாக இணையச் சேவை முடக்­கப்­பட்­டுள்­ள­தாக மேகா­லயா அரசு விளக்­கம் அளித்­துள்­ளது.

மேலும், வன்­மு­றை­யைத் தூண்டும் வகை­யில் செயல்­ப­டக் கூடாது என­வும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!