இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்

புது­டெல்லி: இந்­தி­யா­வுக்­கும் ஆஸ்தி­ரே­லி­யா­வுக்­கும் இடை­யே­யான பொரு­ளா­தார ஒத்துழைப்பும் வர்த்­தக ஒப்­பந்­த­மும் இரு தரப்பிலும் வளர்ச்­சிக்கு வித்திடும் என மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், இரு தரப்­புக்­கும் இடை­யே­யான வர்த்­தக ஒப்பந்­தத்­துக்கு ஆஸ்­தி­ரே­லிய நாடாளு­மன்­றத்­தில் ஒப்­பு­தல் அளித்­தி­ருப்­பது மகிழ்ச்சி அளிப்பதா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நமது ஆழ­மான நட்­பின் விளை­வாக இந்த ஒப்­பந்­தம் நிறை­வே­றி­ உள்­ளது. இது இரு தரப்­புக்­கும் இடை­யே­யான வர்த்தக உற­வு­களின் முழு திறனை அடை­வ­தற்­கும் பெரிய பொருளியல் வளர்ச்சிக்­குத் தூண்டுகோலா­க­வும் இருக்­கும்," என்று அமைச்­சர் பியூஷ் கோயல் கூறி­யுள்­ளார்.

இந்­தியா, ஆஸ்­‌தி­ரே­லியா இடை­யே­யான வர­லாற்­றுச் சிறப்பு­மிக்க பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு, வர்த்­தக ஒப்­பந்­த­மா­னது கடந்த ஏப்­ரல் மாதம் கையெ­ழுத்­தா­னது.

அதன் பின்­னர் இந்த ஒப்­பந்­தத்தை செயல்­ப­டுத்த ஏது­வாக ஆஸ்­தி­ரே­லிய நாடா­ளு­மன்­றத்­தின் ஒப்­பு­த­லைப் பெற வேண்டி இருந்தது.

அதே­வே­ளை­யில் இந்தியா­வில் மத்­திய அர­சின் ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லிய நாடா­ளு­மன்­றம் இந்த வர்த்­தக ஒப்­பந்­தத்­துக்கு ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தாக அந்­நாட்­டுப் பிர­த­மர் அதி­கா­ர­பூர்­வ­மாக தெரி­வித்­துள்­ளார்.

மேலும், இது­கு­றித்து அவர் தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!