காப்புறுதிப் பணத்துக்காக விபத்து வடிவில் ஒரு கொலை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஷாலு தேவி, 32. அக்டோபர் 5ஆம் தேதி இவர் பயணம் செய்த மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மனைவியின் உடலைப் பார்த்து அவரது கணவர் மகேஷ் சந்திரா கதறித் துடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மாயமானார். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் காப்புறுதி அலுவலகத்திற்கு அவர் சென்றதை காவல்துறையினர் விசாரித்து அறிந்தனர். எனவே அவர் மீது சந்தேகம் கிளம்பியது. 

2015ல் மணம் புரிந்த இருவரும் 2017 முதல் பிரிந்து வாழ்வதாகவும்  தெரியவந்தது.

விபத்து என்று முடித்து வைக்கப்பட்ட வழக்கு மீண்டும் தொடங்கப்பட்டது. இருவரும் வசித்த வீட்டின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஷாலு, தமது அண்ணனுடன் மோட்டார்சைக்கிளில் கிளம்பிய சில நொடிகளில் வெளியே வந்த மகேஷ், அங்கிருந்த கார் ஒன்றுக்குள் இருந்தவரிடம் ஏதோ சொல்கிறார். உடனே அந்த கார் வேகமாகப் புறப்பட்டுச் சென்றது. 

காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டார் மகேஷ். 

“திருமணத்தின்போது ஷாலுவின் பெற்றோர் வரதட்சணை கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியதால் எங்கள் இருவருக்குள் அடிக்கடி சண்டை வரும். எனவே மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். அவரது பெயரில் ரூ.2 கோடிக்குக் காப்புறுதி எடுத்துக் கொடுத்தேன். 

“காப்புறுதி எடுத்த ஓராண்டுக்குப் பிறகு உயிரிழந்தால்தான் மொத்தப் பணமும் கிடைக்கும். 

“எனவே கடந்த ஓராண்டாக ஷாலுவிடம் அன்பாக இருப்பதுபோல நடித்தேன். அக்டோபரில் ஓராண்டு முடிந்ததால் காரை ஏற்றிக் கொலை செய்தேன்,” என்று மகேஷ் சந்திரா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இவரோடு இவருக்கு உதவி செய்த கூலிப்படையைச் சேர்ந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!