ஆளுநர்கள் நியமனம்: விதிமுறைகள் வகுக்க கோரிக்கை

மும்பை: ஆளு­நர்­களை நிய­மிப்­ப­தில் விதி­மு­றை­கள் வகுக்­கப்­பட வேண்­டும் என்று மகா­ராஷ்­டிர முன்­னாள் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே வலி­யு­றுத்தி உள்­ளார்.

மத்­திய அர­சால் நிய­மிக்­கப்­படும் ஆளு­நர்­கள், பாஜ­க­வின் கைப்­பாவையாகச் செயல்­ப­டு­வ­தாக எதிர்க்கட்­சி­களும் ஆளும் மாநில முதல்வர்­களும் குற்­றம்­சா­ட்­டி­யுள்­ள­னர். டெல்லி, கேரளா, தமி­ழ­கம், ராஜஸ்­தான், தெலுங்­கானா, மகா­ராஷ்­டிரா மாநி­லங்­களில் ஆளும் கட்­சி­யு­டன் ஆளு­நர்­கள் மோதல் போக்கை கடைப்­பி­டித்து வரு­வ­தாக எதிர்க்­கட்­சி­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

சிவ­சேனா, காங்­கி­ரஸ், தேசிய வாத காங்­கி­ரஸ் உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் ஆளு­நரை மத்­திய அரசு திரும்பப் பெறவேண்­டும் என வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

ஆளும் கட்­சி­யின் பல்­வேறு நலத் திட்­டங்­க­ளுக்கு அவர்­கள் முட்­டுக் கட்­டை­யாக இருப்­ப­தா­க­வும் அவை சாடி­யுள்­ளன.

இந்­நி­லை­யில், மராட்­டி­யர்­க­ளின் மதிப்­பு­மிக்க அடை­யா­ள­மா­கத் திக­ழும் சத்­ர­பதி சிவா­ஜி­யை­யும் சமூக சீர்­தி­ருத்­த­வா­தி­க­ளான ஜோதிபா பூலே, சாவித்­ரி­பாய் பூலே ஆகி­யோரை அவ­ம­திக்­கும் வகை­யி­லும் மகா­ராஷ்­டிரா ஆளு­நர் பகத்­சிங் கோஷ்­யாரி பேசி இருப்பதாக சிவ­சேனா தலை­வர் உத்­தவ் தாக்­கரே கண்­ட­னம் தெரி­வித்துள்­ளார்.

ஆளு­நர் இந்­திய அதி­ப­ரின் பிர­தி­நிதி என்­ப­தால், ஆளு­நரை நிய­மிப்­ப­தில் விதி­மு­றை­கள் வகுக்­கப் பட வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதற்கு ஏற்ப சட்­டம் கொண்டு வரப்­பட வேண்­டும் என்­றும் உத்­தவ் தாக்­கரே கூறி­யுள்­ளார்.

மகா­ராஷ்­டிரத்­தை­யும் அதன் மதிப்­பு­மிக்க அடை­யா­ளங்­க­ளை­யும் அவ­ம­திப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக போராட்­டங்­களை நடத்­து­வ­தற்­கான அறி­விப்பை சிவ­சேனா விரை­வில் வெளி­யி­டும் என்­றும் அவர் எச்­ச­ரித்துள்­ளார்.

ஆளு­நர்­க­ளின் செயல்­பா­டு­கள் குறித்து பல்­வேறு மாநி­லங்­களில் எதிர்ப்பு வலுத்து வரு­வது பாஜக வுக்குப் புதிய தலை­வ­லியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!