ஒரே சிறையில் 44 பேருக்கு எச்ஐவி தொற்று

1 mins read
a03372e9-68fc-421f-bbfc-6cc23557650a
-

டேரா­டூன்: உத்­த­ரா­கண்ட் மாநிலத்­தில் உள்ள சிறைச்­சாலை ஒன்றில் 44 கைதி­க­ளுக்கு எச்­ஐவி நோய்த்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. அவர்­களில் ஒரு பெண் கைதி­யும் அடங்­கு­வார்.

பெரும் அதிர்ச்­சியை ஏற்­படுத்தி உள்ள இந்த விவ­கா­ரம் குறித்து அம்­மா­நில அரசு விசா­ரணை நடத்த உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஹல்த்­வா­னி­யில் உள்ள அந்தச் சிறைச்­சா­லை­யில் 1,699 கைதி­கள் உள்­ளன. அவர்­களில் 70 பேர் பெண் கைதி­க­ளா­வர்.

அண்­மை­யில் கைதி­களில் சில­ருக்கு அடுத்­த­டுத்து உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட கைதி­க­ளுக்கு சிறை மருத்­து­வ­ரின் அறி­வு­றுத்­த­லின் பேரில் ரத்­தப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது­தான் கைதி­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்பு குறித்து தெரி­ய­வந்­தது.

பரி­சோ­த­னை­யில் ஒரு பெண் கைதி உள்­பட 44 கைதி­க­ளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக சிறை நிர்­வா­கம் தெரி­வித்­தது.

ஹல்த்­வானி சிறைச்­சா­லை­யில் எச்­ஐவி தொற்று பாதிப்பு உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வதாக சமூக ஆர்­வ­லர்­கள் சுட்டிக்­காட்டி உள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­பட வேண்­டும் என்­றும் பாதிப்பு எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தற்­கான கார­ணங்­க­ளைக் கண்­டறிய வேண்டும் என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

தற்­போது பாதிப்­புக்கு ஆளாகி­யுள்ள கைதி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், அனைத்து கைதி­க­ளுக்­கும் ரத்தப் பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­வ­தாக சிறைத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.