ஒடிசா ரயில் விபத்து: பிணவறையில் இருந்து மகனை உயிருடன் மீட்ட தந்தை

பாலேஸ்­வர்: மேற்கு வங்க மாநி­லத்­தின் ஹவுரா நக­ரில் வசித்­து­வ­ரும் ஹெல­ராம் மாலிக் என்­ப­வ­ரின் மகன் விஸ்­வ­ஜித் (24) கோல்­கத்­தா­வி­லி­ருந்து புறப்­பட்ட கோர­மண்­டல் எக்ஸ்­பி­ரஸ் ரயி­லில் பய­ணம் செய்­துள்­ளார். இத­னி­டையே, ஒடிசா ரயில் விபத்து குறித்த தக­வல் அறிந்­த­தும், ஹெல­ராம் தனது மகன் விஸ்­வ­ஜித்தை கைப்­பே­சி­யில் அழைத்­துப் பேசி­னார். அப்­போது, தான் உயி­ரு­டன் இருக்­கி­றேன். ஆனால், கடு­மை­யா­கக் காய­ம­டைந்­த­தாக உடைந்த குர­லில் விஸ்­வ­ஜித் தெரி­வித்­துள்­ளார். இதை­ய­டுத்து, ஹெல­ராம் தனது உற­வி­னர் ஒரு­வ­ரு­டன் அவ­சர சிகிச்சை வாக­னத்­தில் பால­சோர் விரைந்­துள்­ளார்.

230 கி.மீ. தூர பய­ணத்­துக்­குப் பிறகு காய­ம­டைந்­த­வர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் சென்று விஸ்­வ­ஜித்தை தேடி உள்­ளார். ஆனால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

இத­னி­டையே இது­கு­றித்து சில­ரி­டம் விசா­ரித்­த­போது, அங்­கி­ருந்த ஒரு­வர், காய­ம­டைந்­த­வர் மருத்­து­வ­ம­னை­களில் இல்­லை­யென்­றால், சட­லங்­கள் அடுக்கி வைக்­கப்­பட்­டுள்ள பாஹ­நாகா உயர்­நி­லைப்­பள்­ளிக்­குச் சென்று தேடிப்­பா­ருங்­கள் எனக் கூறி­யுள்­ளார். ஆனால், தன் மகன் உயி­ரி­ழந்­தி­ருப்­பார் என அவர்­கள் கூறி­யதை ஹெல­ராம் ஏற்­க­வில்லை. எனி­னும் அங்கு சென்று தேடி­னார். அப்­போது ஓர் உட­லில் இருந்து கை அசை­வதை ஹெல­ராம் பார்த்­தார். அது வேறு யாரு­மல்ல. அவ­ரு­டைய மகன் விஸ்­வ­ஜித்­தான். சட­லங்­க­ளுக்கு இடையே உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த தனது மகனை அங்­கி­ருந்து தூக்கி அவ­சர சிகிச்சை வாக­னம் மூலம் பாலேஸ்­வர் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றார் ஹெல­ராம். எனி­னும், கட்­டாக் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு விஸ்­வ­ஜித்தை அழைத்­துச் செல்­லு­மாறு அங்­கி­ருந்த மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்­தி­னர். பின்­னர் தனது மகனை கோல்­கத்­தா­வுக்கு அழைத்­துச் சென்று அங்­குள்ள ஒரு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தார் ஹெல­ராம். அங்கு விஸ்­வ­ஜித்­துக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. கவ­லைக்­கி­ட­மாக இருந்­தா­லும் உயி­ருக்கு ஆபத்து இல்லை என மருத்­து­வர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!