வேட்டி சட்டையுடன் சென்றதால் விராத் கோஹ்லி உணவகத்தில் அனுமதி மறுப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லிக்குச் சொந்தமாக மும்பையில் ‘ஒன் 8’ என்ற உணவகம் உள்ளது. இங்கு தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சாப்பிடச் சென்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வருத்தத்துடன் மதுரையைச் சேர்ந்த ராம் என்ற சமூக ஊடகப் பிரமுகர் ஒருவர் காணொளி பதிவிட்டுள்ளார்.

மும்பை ஜூகு பகுதிக்கு வந்திருந்த இவர், கோலிக்குச் சொந்தமான ‘ஒன் 8’ உணவகத்துக்கு வெண்ணிற வேட்டி, சட்டையில் உணவு உண்ணச் சென்றுள்ளார்.

ஆனால், அவர் வேட்டி அணிந்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி உணவக நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த வருத்தமடைந்த ராம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இதுதான் விராட் கோலியின் ‘ஒன் 8’ உணவகம். இங்கு சாப்பிடுவதற்காக இவ்வளவு தூரம் வந்த எனக்கு இதுபோல் ஒரு சம்பவம் நடந்தது மிகவும் மனதுக்கு கஷ்டமாகி விட்டது. பெரும்பாலானோர் விராட்கோலியின் பெயருக்காகத்தான் இங்கு சாப்பிட வருகின்றனர்.

“புதிய வேட்டி சட்டையைத்தான் அணிந்து வந்துள்ளேன். ஆனால் பசியோட வந்த என்னை ‘டிரஸ்கோட்’ சரியில்லை என்று கூறி அனுமதி மறுத்துவிட்டார்கள். இனிமேலும இப்படி நடக்காமல் இருக்க வேண்டும். இதுகுறித்து விராட் ஹோலியின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளேன்,” என்று ராம் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!