ஜனவரி 6ல் நேரில் முன்னிலையாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜனவரி 6ல் நேரில் முன்னிலையாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவு

1 mins read
d604d92f-b811-41da-8e89-a96c568a8ba8
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சுல்தான்பூர்: அனைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கின் வாதம் கடந்த நவம்பர் 18ஆம் தேதி நிறைவுற்றது. அதன் பின்னர் வழக்கு நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் ராகுல் காந்தியை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நவம்பர் 27ஆம் தேதி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதனையடுத்து ஜனவரி 6ஆம் தேதி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உ.பி. நீதிமன்றம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2018 ஆகஸ்ட் 4-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘பாஜக நேர்மையான அரசியலை முன்னெடுத்து வருவதாகக் கூறும் அக்கட்சியின் தலைவர் (அப்போதைய தலைவர் அமித்ஷா) மீது, கொலைக் குற்றச்சாட்டு வழக்கு பதிவாகி இருக்கிறது,’’ என்றார். இதையடுத்து, சுல்தான்பூரைச் சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்.

குறிப்புச் சொற்கள்
ராகுல் காந்திகாங்கிரஸ்