இந்திய நாட்டவருக்கு கனடாவின் உயரிய விருது

இந்திய நாட்டவருக்கு கனடாவின் உயரிய விருது

1 mins read
deaca628-e1ae-471d-a3d7-204425e67e96
 பிர்தெளஸ் கராஸ் - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இந்தியாவில் பிறந்த 68 வயது பிர்தெளஸ் கராசுக்கு கனடாவின் உயரிய பதவியான ‘ஆர்டர் ஆஃப் கனடா’ அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

மனிதநேயத்தை மையப்படுத்திய ஊடகச் செயல்பாட்டின் மூலம் சமூக மாற்றத்தை விதைத்தமைக்காக இவருக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

“இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நெகிழ்ச்சியடைகிறேன். கனடாவுக்குக் குடியேறிய எனக்கு இந்தப் பதவி அர்த்தம் நிறைந்தது. கனடாவின் மிகச் சிறுபான்மை சமூகமான பார்ஸி சமூகம் அதிகம் சாதிக்கக் கூடியதாக உள்ளது. இது நிறைவளிப்பதாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அனிமேஷன் படங்கள் சார்ந்த தயாரிப்பாளரான பிர்தெளஸ் கராஸின் படைப்புகள், இந்தியா உள்பட 198 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 125க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு பல்கலைகழங்களின் கெளரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்