உல்பா அமைப்புடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி ஒப்பந்தம்

உல்பா அமைப்புடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி ஒப்பந்தம்

1 mins read
c4b4d4ea-61ee-4dca-ab3b-31a0114249db
அமைதிக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.  - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

டிஸ்பூர்: வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் நடத்தி வருகிறது.

இதன் பலனாக பல்வேறு அமைப்புகள் அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்நிலையில் ‘உல்பா’ அமைப்புடனும் மத்திய, மாநில அரசுகள் கடந்த 12 ஆண்டுகளாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை நடத்தி வந்தன.

இந்த நிலையில் உல்பா அமைப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அசாம் முதல் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உல்பா பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் உல்பா அமைப்புடன் மத்திய, மாநில அரசுகள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

“உல்பாவின் வன்முறையால் அசாம் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் சுமார் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமின் மிகப் பழமையான கிளர்ச்சிக் குழுவான ‘உல்பா’, வன்முறையைக் கைவிடவும், அமைப்பை கலைக்கவும், ஜனநாயக செயல்பாட்டில் சேரவும் ஒப்புக்கொண்டுள்ளது,” என்றார் அமித்ஷா.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அசாமுக்கு ஒரு பெரிய வளர்ச்சித் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்