பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் காணொளி வடிவில் பிரசார விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாஜக தனது பிரசார விளம்பரங்களில் திரிக்கப்பட்ட மற்றும் சித்திரிக்கப்பட்ட காணொளிகளைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை அவமதித்து வருவதாக பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், பவன் கெரா மற்றும் குர்தீப் சப்பல் ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்தில் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் புகார் மனுவை அளித்தனர்.

மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் ஒன்றாக நடைபெறும் ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவது குறித்தும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது காங்கிரஸ். அங்கு மாநில அரசின் திட்டங்கள் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் மாநில முதல்வரின் படங்கள் இருப்பது புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!